பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை மாதம் பிறப்பு; மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை, 1ல் மாலை அணிவது வழக்கம். கார்த்திகை மாத பிறப்பான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கிருஷ்ணகிரியில், சேலம் சாலையிலுள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர். கோவில் குருசாமி சிவதாஸ், பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார். தொடர்ந்து, 45 நாட்கள் நடக்கும் ஐயப்பன் கோவில் மண்டல பூஜையும் நேற்று துவங்கியது.

கிருஷ்ணகிரி: ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை, 1ல் மாலை அணிவது வழக்கம். கார்த்திகை மாத பிறப்பான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கிருஷ்ணகிரியில், சேலம் சாலையிலுள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர். கோவில் குருசாமி சிவதாஸ், பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார். தொடர்ந்து, 45 நாட்கள் நடக்கும் ஐயப்பன் கோவில் மண்டல பூஜையும் நேற்று துவங்கியது. முன்னதாக ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஒவ்வோர் ஆண்டும் இந்த ஐயப்பன் கோவிலில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்னையால், 130 பேர் மட்டுமே நேற்று மாலை அணிந்தனர். இந்த ஆண்டு, இரண்டு கொரோனா தடுப்பூசி அணிந்தவர்கள் அல்லது, 48 மணி நேரத்திற்கு முன், பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் முன்பதிவின் அடிப்படையில், ஒரு நாளைக்கு, 30 ஆயிரம் பேர் மட்டுமே, சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X