பொது செய்தி

தமிழ்நாடு

காளிக்கோவில் அருகே வெள்ளம்: கிராமங்கள் துண்டிப்பால் மக்கள் அவதி

Added : நவ 18, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - குப்பம் சாலையிலுள்ள காளிக்கோவில் கிராமத்தின் அருகில் ஓடை ஒன்று உள்ளது. இதை கடந்து துரை ஏரி, கொல்லகொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வந்து செல்கின்றனர். விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ள இப்பகுதியினர், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை இந்த ஓடையை கடந்துதான் கிருஷ்ணகிரி, குப்பம் போன்ற இடங்களில் விற்பனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - குப்பம் சாலையிலுள்ள காளிக்கோவில் கிராமத்தின் அருகில் ஓடை ஒன்று உள்ளது. இதை கடந்து துரை ஏரி, கொல்லகொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வந்து செல்கின்றனர். விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ள இப்பகுதியினர், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை இந்த ஓடையை கடந்துதான் கிருஷ்ணகிரி, குப்பம் போன்ற இடங்களில் விற்பனை செய்கின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் ஆந்திராவில் உள்ள வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காற்றாற்று வெள்ளம் இந்த ஓடை வழியாக செல்கிறது. இதனால் இரண்டு நாட்களாக மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இங்கு இரண்டு சிறிய பாலங்களை கட்டி கொடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இரண்டாவது நாளாக ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், கிராமமே துண்டிக்கப்பட்டுள்ளது. ஊரை விட்டு வந்தவர்கள் வீடு திரும்ப கயிறு கட்டி, அதை பிடித்தபடி ஆபத்தான முறையில் ஓடையை கடந்து செல்கின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் ஓடையின் குறுக்கே இரண்டு இடங்களில் பாலங்கள் அமைக்க கோாரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X