பொது செய்தி

தமிழ்நாடு

காவேரிப்பட்டணத்தில் இடிந்த வீட்டுக்கு தி.மு.க.,வினர் ரூ.1 லட்சம் நிவாரணம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் சூரிய நாராயண ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் ஜோதிபுரம், சந்தை பாளையம், சுண்ணாம்புக்கார தெருக்களிலுள்ள குடியிருப்புகளில் நுழைந்தது. அப்பகுதிகளில் நேற்று காலை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். தி.மு.க., பிரமுகர்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் சூரிய நாராயண ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் ஜோதிபுரம், சந்தை பாளையம், சுண்ணாம்புக்கார தெருக்களிலுள்ள குடியிருப்புகளில் நுழைந்தது. அப்பகுதிகளில் நேற்று காலை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். தி.மு.க., பிரமுகர் சீனிவாசன், பேரூர் கழக செயலாளர் பாபு உள்ளிட்ட, தி.மு.க.,வினர் பாதிக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள் வழங்கினர். அப்போது, ஜோதிபுரத்தில் வசிக்கும் முருகேசன், 60 என்பவரது வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அனைவரும் உயிர் தப்பினர். முருகேசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ஒரு லட்ச ரூபாய் நிவாரணத்தை, தி.மு.க.,வினர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X