சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூலித்தொழிலாளியை கடத்தி தாக்கிய ஆவின் தலைவர் உட்பட 3 பேர் கைது

Added : நவ 18, 2021
Share
Advertisement
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, கூலித்தொழிலாளியை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், அ.தி.மு.க.,வை சேர்ந்த தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்ட மூன்று பேரை நேற்று, பென்னாகரம் போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த தாளப்பள்ளத்தை சேர்ந்தவர் டி.ஆர்.அன்பழகன், 58; இவர், அ.தி.மு.க., மாநில விவசாய அணி தலைவராகவும், தர்மபுரி ஆவின் தலைவராகவும் உள்ளார்.

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, கூலித்தொழிலாளியை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், அ.தி.மு.க.,வை சேர்ந்த தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்ட மூன்று பேரை நேற்று, பென்னாகரம் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த தாளப்பள்ளத்தை சேர்ந்தவர் டி.ஆர்.அன்பழகன், 58; இவர், அ.தி.மு.க., மாநில விவசாய அணி தலைவராகவும், தர்மபுரி ஆவின் தலைவராகவும் உள்ளார். இவர், ரங்காபுரம் அருகே ஜல்லி கிரசர் நடத்தி வருகிறார். அங்கு பணியாற்றுவோர் டீசலை திருடி வெளியாட்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது. இந்த டீசலை ஜெல்மாரம்பட்டியை சேர்ந்த முத்துவேல், 36 மற்றும் சுரேஷ், 32, ஆகியோர் தங்கள் வாகனங்களுக்கு வாங்கி பயன்படுத்தி உள்ளதாக டி.ஆர்.அன்பழகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களை நேற்று காலை, 10:00 மணிக்கு, தன் ஸ்கார்பியோ காரில் கடத்திச் சென்று, அவருடைய கல்குவாரியில் வைத்து தாக்கியதாக, பாதிக்கப்பட்ட முத்துவேலுவின் தந்தை பெரியசாமி, பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடம் சென்ற போலீசார், அங்கிருந்த முத்துவேல், சுரேஷ் ஆகியோரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, தாளப்பள்ளத்தை சேர்ந்த டி.ஆர்.அன்பழகன், முருகன், 38, கொட்லுமாரம்பட்டியை சேர்ந்த மகேந்திரன், 32, உள்ளிட்ட மூவரை, ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X