பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை: ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்: தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை வினாடிக்கு, 43 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டி, அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம், கபினி அணையிலிருந்து

ஒகேனக்கல்: தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை வினாடிக்கு, 43 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டி, அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம், கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 2,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினாடிக்கு, 11 ஆயிரம் கன அடி என மொத்தம், 13 ஆயிரம் கன அடி உபரிநீர் தமிழகத்துக்கு திறக்கப்படுகிறது. இந்நிலையில், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, நாட்றாம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால், சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து காவிரியில் கலக்கிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 46 ஆயிரம் கன அடியாக அதிகரித்து, பின் மாலை, 5:00 மணிக்கு, 43 ஆயிரம் கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணை முழு கொள்ளளவுடன் உள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்தேக்கமடைந்து, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைப்பாதை மீது தண்ணீர் செல்வதால், நடைப்பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X