வருமான வரித்துறையில் 50 சதவீதத்துக்கு மேல் காலி இடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வருமான வரித்துறையில் 50 சதவீதத்துக்கு மேல் காலி இடம்'

Added : நவ 18, 2021
Share
ஈரோடு: ''வருமான வரித்துறையில், 50 சதவீதத்துக்கு மேல் காலிப்பணியிடங்கள் உள்ளன,'' என, தமிழ்நாடு, புதுச்சேரி சர்க்கிள் வருமான வரித்துறை ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறினார்.ஈரோட்டில் மாநில பிரதிநிதிகள் மாநாடு நடத்துவது குறித்த, வரவேற்பு குழு அமைப்புக்கான கூட்டம் நடந்தது. மாநில தலைவர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவராக ஈரோடு

ஈரோடு: ''வருமான வரித்துறையில், 50 சதவீதத்துக்கு மேல் காலிப்பணியிடங்கள் உள்ளன,'' என, தமிழ்நாடு, புதுச்சேரி சர்க்கிள் வருமான வரித்துறை ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறினார்.


ஈரோட்டில் மாநில பிரதிநிதிகள் மாநாடு நடத்துவது குறித்த, வரவேற்பு குழு அமைப்புக்கான கூட்டம் நடந்தது. மாநில தலைவர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவராக ஈரோடு சேகர், செயலாளர் மேபல், பொருளாளர் பூபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இணை ஆணையாளர் சுப்புரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர். பின், பொதுச்செயலாளர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது: சம்மேளனத்தின், 13வது மாநில பிரதிநிதிகள் மாநாடு ஜன., 7, 8 ல் ஈரோட்டில் நடக்க உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து வருமான வரித்துறை அலுவலர்கள், நிர்வாகிகள் பங்கேற்பர். வருமான வரித்துறையில் தமிழகத்தில், 6,000 பேர் பணி செய்ய வேண்டிய இடத்தில், 2,800 பேர் மட்டுமே பணி செய்கிறோம். 50 சதவீதத்துக்கு மேல் காலிப்பணியிடமாக உள்ளது. தமிழகத்தில் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ள நிலையில், அவர்களுக்கு வாய்ப்பளித்ததாக அமைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், வடமாநிலத்தவர்களை வேலைக்கு வைக்கும் நிலை உள்ளது. தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, இங்கு பணி செய்யும் வடமாநிலத்தவர்களை, அவர்கள் ஊரில் பணி செய்யும் வகையில் பணியிட மாற்றத்தை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சமீப காலங்களில் மத்திய அரசு அலுவலகங்களில், இணை செயலர் நிலைகளில் வெளி ஆட்களை வேலைக்கு அமர்த்தி உள்ளனர். இணை செயலர் பதவி என்பது அரசையும், அத்துறையையும் இணைக்கும் பாலமாக உள்ள பதவி. அப்பதவியில், 34 பேரை ஐந்தாண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வெளி நபரை நியமித்ததை கண்டிக்கிறோம். துறை அனுபவம் உள்ளவர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X