பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு; 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Added : நவ 18, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையிலிருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், ஐந்து மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதமாக பரவலாக மழை பெய்வதால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் கடந்த செப்., 22 முதல், 50 அடிக்கு மேல் உள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொடரும்

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையிலிருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், ஐந்து மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதமாக பரவலாக மழை பெய்வதால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் கடந்த செப்., 22 முதல், 50 அடிக்கு மேல் உள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொடரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 1,346 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 1,739 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு இடது மற்றும் வலதுப்புற வாய்க்கால் மூலம், 177 கன அடி, சிறிய மதகின் மூலம் தென்பெண்ணை ஆற்றில், 1,627 கன அடி என மொத்தம், 1,804 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் அணைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை பொறுத்து, ?மேலும் அதிகளவில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்ட தென்பெண்ணையாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடக்க வேண்டாம் என, பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர். அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 1.66 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு வைக்கலாம். நேற்று அணை நீர்மட்டம், 51.15 அடியில், 1.56 டி.எம்.சி.,யாக நீர்இருப்பு இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X