பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.84 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தகம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், லீபஜாரில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. அதில், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்தனர். அதற்கேற்ப, வியாபாரிகள் பங்கேற்றனர். இதுகுறித்து, லீபஜார் சங்க நிர்வாகிககள் கூறியதாவது: மழையால் கடந்த வாரம், 300க்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகளை மட்டும் விவசாயிகள் கொண்டு வந்தனர். தற்போது, 1,200 மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். கடந்த வாரம்

சேலம்: சேலம், லீபஜாரில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. அதில், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்தனர். அதற்கேற்ப, வியாபாரிகள் பங்கேற்றனர். இதுகுறித்து, லீபஜார் சங்க நிர்வாகிககள் கூறியதாவது: மழையால் கடந்த வாரம், 300க்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகளை மட்டும் விவசாயிகள் கொண்டு வந்தனர். தற்போது, 1,200 மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். கடந்த வாரம் விரலி ரகம் குவிண்டால், 6,700 முதல், 8,000 ரூபாய் வரை விற்றது, தற்போது, 7,000 முதல், 9,000 வரை விலைபோனது. உருண்டை ரகம், 6,500 முதல், 7,500 ரூபாய் வரை விலைபோனது. பனங்காலி ரகம் வரத்து இல்லை. 1,200 மூட்டைகள் மூலம், 84 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தொடர் மழையால் அடுத்த ஆண்டு வரக்கூடிய மஞ்சள், உடைந்த நிலையில் வர வாய்ப்புள்ளது. இதனால், தற்போது வியாபாரிகள் மஞ்சளை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர். தேவை அதிகரிப்பால், அதன் விலை உயர்ந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X