பொது செய்தி

தமிழ்நாடு

45 ஆயிரம் கனஅடி உபரிநீர் மேட்டூர் அணையில் திறப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணையில் வினாடிக்கு, 45 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த, 13 இரவு, அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. 14 காலை முதல் வினாடிக்கு, 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று, கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து வினாடிக்கு, 15 ஆயிரம் கனஅடி உபரிநீர்

மேட்டூர்: மேட்டூர் அணையில் வினாடிக்கு, 45 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த, 13 இரவு, அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. 14 காலை முதல் வினாடிக்கு, 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று, கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து வினாடிக்கு, 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. தமிழகம் கர்நாடகா எல்லையிலுள்ள, 64 கி.மீ., காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரம் அடைந்த பருவமழையால், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 45 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து அணை, சுரங்க மின் நிலையங்கள் வழியாக, வினாடிக்கு, 22 ஆயிரம் கனஅடி, உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு, 23 ஆயிரம் கனஅடி என, 45 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X