பொது செய்தி

தமிழ்நாடு

'நீர் நிலைகளை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'

Added : நவ 18, 2021
Share
Advertisement
வேலூர்: ''நீர் நிலைகளை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.வேலூர் மாவட்டம், காட்பாடியில், 68வது கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். 1,151 பேருக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கி பேசியதாவது:

வேலூர்: ''நீர் நிலைகளை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.


வேலூர் மாவட்டம், காட்பாடியில், 68வது கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். 1,151 பேருக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கி பேசியதாவது: கூட்டுறவு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் நல்லவைதான். அதை செயல்படுத்துவதில் தான் பல குறைகள் உள்ளன. அந்த குறைகள் களையப்பட வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். கடந்த ஆட்சியில் போலி நகைகள், போலி ஆவணங்கள் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவர். அந்த முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில், மகளிர் வாங்கும் கடன்களை நேர்மையாக திருப்பி செலுத்தி வருகின்றனர். நீர் நிலைகளை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அகரம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை, கலெக்டர் உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கைத்தறி துறை அமைச்சர் காந்தி, எம்.பி.,க்கள் அரக்கோணம் ஜெகத்சட்சகன், வேலூர் கதிர் ஆனந்த், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X