பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
வேலூர்: அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி தொகுதியில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் துரைமுருகன், வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்கு நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல் நேற்று காலை, 8:00 வரை, 71 மி.மீ., மழை பெய்தது. காட்பாடி ரயில்வே ஸ்டேஷன், குமரப்ப நகர், பாலாஜி,

வேலூர்: அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி தொகுதியில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் துரைமுருகன், வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்கு நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல் நேற்று காலை, 8:00 வரை, 71 மி.மீ., மழை பெய்தது. காட்பாடி ரயில்வே ஸ்டேஷன், குமரப்ப நகர், பாலாஜி, பாரதி நகரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வி.ஜி.ராவ் நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு கால்வாய் கட்டும் பணி நடந்து வருவதால் வெள்ள நீர் புகுந்தது. மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. பல இடங்களில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்பு, தேள் வீடுகளுக்குள் புகுந்தன. தாராபடவேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. ஊழியர்கள் அதை வெளியேற்றிய போது, அங்குள்ள தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சுவற்றில் ஷாக் அடித்ததால், நோயாளிகள், டாக்டர், செவிலியர்கள் வெளியே ஓடினர். வி.ஜி.ராவ் நகர் 'ஏ' செக்டர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்ததால் அரிசி, சர்க்கரை நாசமானது. கடையை மூடி விட்டு ஊழியர்கள் சென்றனர். அங்குள்ள சமூதாய கூடத்தில் பாம்புகள் புகுந்ததால் ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டனர். தி.மு.க., நிர்வாகிகள் அவர்களிடம் சென்று, விரைவில் தண்ணீரை வெளியேற்றுவதாக சமாதானப்படுத்தினர். மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார். வேலூர் மாநகராட்சியினர், மோட்டார் வைத்து தேங்கிய தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். பாம்பாட்டிகள் தண்ணீரில் ஓடிய பாம்புகளை தேடி பிடித்து வருகின்றனர். தாராபடவேலு ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற மின் துறையினர், மின் இணைப்பை துண்டித்து ஷாக் அடிப்பதை சரி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X