பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., நடத்தும் போராட்டம்: துரைமுருகன் வரவேற்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
வேலூர்: பா.ஜ., நடத்தும் போராட்டத்திற்கு, அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம்:கேள்வி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதே?பதில்: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே பா.ஜ., அரசுதான்.

வேலூர்: பா.ஜ., நடத்தும் போராட்டத்திற்கு, அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம்:


கேள்வி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதே?


பதில்: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே பா.ஜ., அரசுதான். மோடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு அந்த கட்சியிலேயே தைரியம் வந்துள்ளது. தற்போது போராட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.


கேள்வி: தென்னக நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கடந்த, 10 ஆண்டுகால, அ.தி.மு.க., ஆட்சியில் பணத்தை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?


பதில்: தமிழகத்தில், 10 ஆண்டுகளாக ஒரு அரசே நடக்கவில்லை. அதனால் அவர்கள் பணம் கட்டவில்லை.


கேள்வி: விழுப்புரத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் இடித்து விழுந்துள்ளதே?


பதில்: விழுப்புரத்தில் இடிந்து உடைந்த பாலத்திற்கான மொத்த பணத்தையும் செலுத்தும்படி, அதை கட்டிய கான்ட்ராக்டரிடம் கூறியிருக்கிறோம். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X