சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோடு அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதல்: 5 பேர் பரிதாப பலி

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு அருகே இன்று (நவ.,18) மதியம் ஆம்னி வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் வேனில் வந்த 8 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் இன்று காலை ஆம்னி வாடகைக் காரில் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தனர்.ஈரோடு
ERODE NEAR, SIVAGIRI, ACCIDENT, 5 PERSION, DEAD, ஈரோடு, சிவகிரி, ஆம்னி வேன்,  லாரி, மோதல், 5 பேர், பலி

ஈரோடு: ஈரோடு அருகே இன்று (நவ.,18) மதியம் ஆம்னி வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் வேனில் வந்த 8 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் இன்று காலை ஆம்னி வாடகைக் காரில் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தனர்.


latest tamil news


ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி அருகே மதியம் வரும்போது எதிரே வந்த சிமென்ட் லாரியில் மோதிய கார் சுக்குநூறாக நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இதில், டிரைவர் படையப்பா, காரில் வந்த தெய்வானை, மஞ்சுளா, அருக்காணி, தேன்மொழி என 4 பெண்கள் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் காரில் வந்த குமரேசன், மோகன்குமார், முத்துசாமி ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு டவுன் டி.எஸ்.பி., மோகனசுந்தரம், சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 5 பேரில் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனவே, இந்த பகுதியில் சாலையை அகலப்படுத்தி அல்லது வேகத்தடை அமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டி.எஸ்.பி.,யை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக ஈரோடு-கரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X