சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருட்டுப் புகாரில் மகளுக்கு தீ வைத்த கொடூர தந்தை

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
திருநெல்வேலி: பணகுடி காவல்கிணற்றில் 10 வயது பெண் குழந்தையை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி வட்டம் பணகுடி காவல்கிணறு பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணிராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். சுஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி
திருட்டுப் புகாரில் மகளுக்கு தீ வைத்த கொடூர தந்தை

திருநெல்வேலி: பணகுடி காவல்கிணற்றில் 10 வயது பெண் குழந்தையை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி வட்டம் பணகுடி காவல்கிணறு பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணிராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். சுஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது குழந்தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர். காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்தோணி ராஜ் மற்றும் சுஜா வேலை பார்த்து வருகின்றனர். குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.


latest tamil news



மகேஸ்வரி காவல்கிணற்றில் உள்ள பிரபல பேக்கரி கடையில் திருடியதாக அந்தோணிராஜுடம் கடையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் வீட்டிற்கு சென்று மகேஸ்வரி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து உள்ளார். இதனால் அலறித் துடித்த மகேஸ்வரி தன்னை காப்பாற்றும்படி அந்தோணிராஜை கட்டி பிடித்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் அந்தோணிராஜுக்கும் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10 வயது சிறுமியை தந்தை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sharvintej - மதுரை ,இந்தியா
19-நவ-202108:10:10 IST Report Abuse
Sharvintej கர்த்தர் சொன்ன பாவ மன்னிப்பு எல்லாம் அந்தோணிராஜூக்கு தெரியவில்லை போலும்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
18-நவ-202120:41:49 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN முதல் மனைவி ஏற்கனவே பிரிஞ்சி போய்விட்டதா செய்தி அதில ஏதோ மர்மம் இருக்கு.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-நவ-202109:05:31 IST Report Abuse
Sanny சந்தர்ப்பம் பார்த்து இருந்தார். மாற்றான் பிள்ளையை தொலைத்துவிட....
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
18-நவ-202120:02:42 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan அடுத்தவன் பொண்டாட்டி. அடுத்தவனின் 10 வயது பொண்ணு. பாவம் சிறுமி. பிழைத்துவந்து உண்மையை சொன்னால் விஷயம் வேறுவிதமாக போகக்கூடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X