சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - தந்தை பலி; மகன் மீட்பு

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021
Share
Advertisement
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உப்பாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி விவசாயி பலியானார்; பல மணி நேரம் போராடி அவரது மகன் உயிருடன் மீட்கப்பட்டார்.உடுமலை அருகேயுள்ள உப்பாறு ஓடை பகுதிகளில், கடந்த, 15 ஆண்டுக்கு பின், நேற்று முன்தினம் கன மழை பெய்தது. உப்பாறு அணைப்பகுதியில், 107 மி.மீ.,மழையும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான, பெதப்பம்பட்டியில் 127 மி.மீ., குண்டடம், 200 மி.மீ.,
உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - தந்தை பலி; மகன் மீட்பு

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உப்பாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி விவசாயி பலியானார்; பல மணி நேரம் போராடி அவரது மகன் உயிருடன் மீட்கப்பட்டார்.

உடுமலை அருகேயுள்ள உப்பாறு ஓடை பகுதிகளில், கடந்த, 15 ஆண்டுக்கு பின், நேற்று முன்தினம் கன மழை பெய்தது. உப்பாறு அணைப்பகுதியில், 107 மி.மீ.,மழையும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான, பெதப்பம்பட்டியில் 127 மி.மீ., குண்டடம், 200 மி.மீ., தாராபுரம் பகுதிகளில், 132 மி.மீ., அளவிற்கு மழை பெய்துள்ளது.


latest tamil news




இதனால், வறண்டு காணப்பட்ட உப்பாற்றில், 15 ஆண்டுக்கு பின், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வினாடிக்கு, 2,500 கன அடி நீர், உப்பாறு அணைக்கு வந்தது. அணை நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து, நேற்று மதியம், மொத்தமுள்ள, 24 அடியில், 17.10 அடியாகவும், நீர் இருப்பு, 303.75 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.


latest tamil news





வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தந்தை, மகன்



அணிக்கடவு- வாகத்தொழுவு ரோட்டிலுள்ள உப்பாறு ஓடையில், நேற்று மாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சரக்கு ஆட்டோவில், விவசாய நிலத்திற்கு, அணிக்கடவை சேர்ந்த, சின்னசாமி,75, அவரது மகன் செல்வகுமார்,27 ஆகியோர் சென்றனர். திடீர் வெள்ளப்பெருக்கில், ஆட்டோவுடன் இருவரும் அடித்துச்செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.


latest tamil news




ரப்பர் படகு, டியூப்கள் அணிந்தும், கயிறு கட்டியும், இரவு நேரத்தில் அதிநவீன விளக்குகளுடன், ஓடையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பின், மரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வக்குமாரை மிட்டனர். வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சின்னச்சாமி சடலமாக மீட்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X