கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க சட்டம்: பாக்., லோக்சபாவில் நிறைவேற்றம்

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (27)
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லோக்சபாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என
Pakistan, Parlimet, Bill Pass, கற்பழிப்பு, குற்றவாளிகள், ஆண்மை நீக்க சட்டம், பாகிஸ்தான், லோக்சபா, நிறைவேற்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லோக்சபாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.


latest tamil newsஇந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளிகளின் தண்டனைகளை விரைவுபடுத்துவதற்கும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் மற்றும் விரைவான விசாரணைகளுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த அவசர சட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்து ஓராண்டுக்கு பிறகு, லோக்சபாவில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்பது பிரதமரால் உருவாக்கப்பட்டு முன்மொழியப்பட்ட விதிமுறைகள் ஆகும். இதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்நாளின் எந்த காலகட்டத்திலும் உடலுறவு கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுவார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத்-இ-இஸ்லாமி உறுப்பினர் முஷ்டாக் அகமது தெரிவித்ததாவது: இந்த சட்டம் இஸ்லாத்திற்கு எதிரானது. பாலியல் பலாத்காரம் செய்பவரை பகிரங்கமாக துாக்கிலிட வேண்டும். ஆனால், ஷரியாவில் ஆண்மை நீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். எனினும், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
19-நவ-202111:02:56 IST Report Abuse
M  Ramachandran சபாஷ் சரியான சட்டம். இங்கு இதுபோனால் சட்டம் இயற்றினால் மம்முதாவிற்கும் ராவுளுக்கும் தமிழ்நாடு ரவுடி கும்பலுக்கும் கோபம் பொத்து கொண்டு வரும்.
Rate this:
Cancel
Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ
19-நவ-202109:14:38 IST Report Abuse
Mahalingam Laxman Congratulations. Though i do not approve other actions of Pakistan I appreciate Pakistan in this respect.. It is not correct to to say that islam is against this . It is not done with the purpose of family planning but as a punishment for sex offenders. India should have done long before. Without further delay it should be enacted as a punishment to the sex offenders. One doubt though it may a fear in the minds but what is the guarantee that a criminal without male part will not harass ladies and children just for vengence. I feel death sentence is best. Modi government should make known this public and get a feeler response to this from Public. Ladies will certainly support this.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
19-நவ-202107:37:26 IST Report Abuse
 N.Purushothaman குடும்பக்கட்டுப்பாடு என்பது அவர்களின் மதத்திற்கு எதிரானது என்கிற நிலையில் இந்த சட்டம் செல்லுபடியாகாமல் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது ....அதனால இதிலெல்லாம் முந்திகிட்டு அவுங்களுக்கு ஆதரவா கருத்து சொல்லாமல் வெயிட் அண்ட் வாட்ச் ஆக இருப்பதே நல்லது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X