கர்தார்பூர் குருத்வாராவில் பஞ்சாப் அமைச்சரவை குழு வழிபாடு

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுடில்லி: பாக்.கில் கர்தார்பூரில் குருத்வாரா தர்பார் சாஹிப் புனித தலத்திற்கு இன்று பஞ்சாப் அமைச்சரவை குழுவினர் வழிபாடு நடத்தினர்.இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாக்.,கில் உள்ள சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் சமாதி அடைந்த குருத்வாரா தர்பார் சாஹிப் புனித தலம் உள்ளது. இதையும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் மாவட்டத்தில் உள்ள தேரா
 கர்தார்பூர், குருத்வாரா, பஞ்சாப், அமைச்சரவை குழு ,வழிபாடு

புதுடில்லி: பாக்.கில் கர்தார்பூரில் குருத்வாரா தர்பார் சாஹிப் புனித தலத்திற்கு இன்று பஞ்சாப் அமைச்சரவை குழுவினர் வழிபாடு நடத்தினர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாக்.,கில் உள்ள சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் சமாதி அடைந்த குருத்வாரா தர்பார் சாஹிப் புனித தலம் உள்ளது. இதையும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும் இணைக்கும் கர்தார்புர் சாஹிப் பாதையை, பிரதமர் மோடி 2019ல் திறந்து வைத்தார். இப்புனிதலத்திற்கு இந்தியாவிலிருந்து விசா இன்றி செல்லலாம்.

கொரோனா பரவல் காரணமாக 2020, மார்ச்சில் கர்தார்புர் சாஹிப் பாதை மூடப்பட்டது. நாளை (நவ.19) குருநானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு, கர்தார்புர் சாஹிப் பாதை நேற்று (நவ.17) திறக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் இன்று (நவ.18) பஞ்சாப் காங்., முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவைக் குழுவினர் கர்தார்பூர் புனித பயணம் சென்றனர். அங்கு குருத்வாரா தர்பார் சாஹிபில் வழிபாடு நடத்தினர். முன்னதாக இவர்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் பரிசோதனை சான்றிதழை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X