ஜி.எச்.,ல் வசதிகளை மேம்படுத்துங்க! அரசு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தினமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.மருத்துவமனையில் கட்டட வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அதற்கேற்ப பணியிடங்கள்



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தினமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.மருத்துவமனையில் கட்டட வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
அதற்கேற்ப பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. சிறப்பு பிரிவு மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை. பொள்ளாச்சி நகரம், சுற்றுப்பகுதி கிராமங்கள், பழங்குடியின மக்கள் பயன்பெற, அரசு மருத்துவமனை முக்கிய ஆதாரமாக உள்ளது. மருத்துவமனையில், 6 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில், மூன்று பேர் மட்டுமே பணியாற்றுவதால், மருந்து வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. செவிலியர்கள் போதியளவு இல்லாததால், இருக்கும் செவிலியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது.அதேபோன்று, எக்ஸ்ரே பிரிவு, 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே ஒரு டெக்னீஷியன் மட்டும் பணியில் உள்ளார். கூடுதலாக பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.ரத்த பரிசோதனை, சிறுநீர் உள்ளிட்ட சோதனைகளை விரைந்து மேற்கொள்ள கூடுதல் பணியாளரை நியமிக்க வேண்டும்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட பின், நர்சிங் கல்லுாரி அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இதுவரை நர்சிங் கல்லுாரி அமைக்கப்படாமல் உள்ளது. மருத்துவமனை வளாகத்தில், துாய்மைப்பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.கடந்த தி.மு.க., ஆட்சியில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளில் கட்டட வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பணியிடங்களை நிரப்பி, மக்களுக்கு முழுமையான மருத்துவ சேவை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X