40 சதவீத நூலகங்களுக்கு பூட்டு; நூலகர் நியமிக்க வேண்டுகோள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஆனைமலை: ஆனைமலை ஒன்றியத்திலுள்ள, 19 ஊராட்சிகளில், 40 சதவீதம் நுாலகங்கள் பூட்டப்பட்டு காட்சிப்பொருளாக உள்ளதால், நுால்கள் வீணாகிறது.ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகளில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், நுாலகம் கட்டப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகையுள்ள காளியாபுரம், அங்கலக்குறிச்சி, திவான்சாபுதுார் உள்ளிட்ட ஊராட்சிகளில், கூடுதலாக சிறிய அளவில்
 40 சதவீத நூலகங்களுக்கு பூட்டு; நூலகர் நியமிக்க வேண்டுகோள்

ஆனைமலை: ஆனைமலை ஒன்றியத்திலுள்ள, 19 ஊராட்சிகளில், 40 சதவீதம் நுாலகங்கள் பூட்டப்பட்டு காட்சிப்பொருளாக உள்ளதால், நுால்கள் வீணாகிறது.ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகளில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், நுாலகம் கட்டப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகையுள்ள காளியாபுரம், அங்கலக்குறிச்சி, திவான்சாபுதுார் உள்ளிட்ட ஊராட்சிகளில், கூடுதலாக சிறிய அளவில் ஊர்ப்புற நுாலகங்களும் திறக்கப்பட்டுள்ளன.இதில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நுாலகர்களாக நியமித்து, ஊராட்சியினர் நுாலகங்களை நடத்தி வருகின்றனர். நாளிதழ்கள், வார இதழ்கள், போட்டித்தேர்வுக்கு தயாராவோருக்கான புத்தகங்கள் வைத்திருந்தனர்.சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரையில், அனைத்து தரப்பினருக்கும் நுாலகம் பயன்படுகிறது. இந்நிலையில், ஒன்றியத்திலுள்ள, 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட நுாலகங்கள் நுாலகர் இல்லாமல், பூட்டப்பட்டு புத்தகங்கள் கரையானுக்கு இரையாகின்றன.ஆலாங்கடவு, சோமந்துறை, மாரப்பகவுண்டன்புதுார் உள்பட ஊராட்சிகளில், பல ஆண்டுகளாக நுாலகங்கள் காட்சிப்பொருளாக உள்ளன. நுாலகங்களை திறந்து செயல்படுத்த வலியுறுத்தி, கிராம சபைக்கூட்டம், ஒன்றியக்குழு கூட்டங்களிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளன. விரைவில் நுாலகர் நியமித்து நுாலகங்களை திறக்க, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X