தமிழ்நாடு

புலிக்குட்டிக்கு 50வது நாளாக சிகிச்சை: தனியாக அரண் அமைத்து கண்காணிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
வால்பாறை: வால்பாறை அருகே, புதரில் இருந்து மீட்கப்பட்ட புலிக்கு மானாம்பள்ளி பவர்ஹவுஸ் பகுதியில், 50வது நாளாக வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட முடீஸ் பகுதியில், நடமாடிய ஒரு வயது ஆண் புலியை வனத்துறையினர்மீட்டு, ரொட்டிக்கடையில் உள்ள வனஉயிரின மீட்பு மையத்தில் சிகிச்சை அளித்தனர்.அந்த
 புலிக்குட்டிக்கு 50வது நாளாக சிகிச்சை: தனியாக அரண் அமைத்து கண்காணிப்பு



வால்பாறை: வால்பாறை அருகே, புதரில் இருந்து மீட்கப்பட்ட புலிக்கு மானாம்பள்ளி பவர்ஹவுஸ் பகுதியில், 50வது நாளாக வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட முடீஸ் பகுதியில், நடமாடிய ஒரு வயது ஆண் புலியை வனத்துறையினர்மீட்டு, ரொட்டிக்கடையில் உள்ள வனஉயிரின மீட்பு மையத்தில் சிகிச்சை அளித்தனர்.அந்த ரோட்டில், அதிகஅளவில் வாகனங்கள் செல்வதாலும், மக்கள் அதிக அளவில், புலியை காண கூடுவதாலும், மானாம்பள்ளி பவர்ஹவுஸ் பகுதிக்கு கடந்த மாதம், 16ம் தேதி இடமாற்றம் செய்தனர்.இந்நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டுதலின்படி புலியின் வாழ்விடத்திலேயே தனியாக பாதுகாப்பு அரண் அமைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதனால், இடம் தேர்வு செய்தல் மற்றும் வழிகாட்டுதலின் பொருட்டு, தலைமை வன உயிரின காப்பாளர் சேகர்குமார்நீரஜ் தலைமையில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம், துணை இயக்குனர் கணேசன், வனத்துறை கால்நடை மருத்துவ அலுவலர் கலைவாணன் ஆகியோர் புலியின் உடல்நிலை குறித்து,கடந்த மாதம் ஆய்வு செய்தனர்.இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகளின் அறிவுரை படி, புலிக்குட்டிக்கு வனத்துறையினர் தொடர்ந்து, 50வது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'முடீஸ் பகுதியில் பிடிப்பட்ட புலிக்குட்டியை பராமரிக்க தனியாக அரண் அமைத்து, கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.தேவையான உணவு வழங்கப்படுவதால், புலிக்குட்டி ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளது. வனத்துறையினர், 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புலிக்குட்டி முழுமையாக குணமடைந்த பின், வனத்திற்குள் விடுவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X