புதுடில்லி,: மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், தன் மீதான கைது நடவடிக்கைகளை கைவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங், பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து மதுபான விடுதி உரிமையாளரை மிரட்டி, 9 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக, பரம்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. அவர் தலைமறைவானார்.
போலீசின் கோரிக்கையை ஏற்று, பரம்வீர் சிங் உள்ளிட்ட அதிகாரி களை குற்றவாளிகளாக அறிவித்து நேற்று முன்தினம் மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து தன் மீதான கைது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பரம்வீர் சிங் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று (நவ.18) விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பரம்வீர் சிங் எங்கு இருக்கிறார் என யாருக்கும் தெரியாது. அவர் வெளிநாட்டில் இருந்தபடி, இந்த கோரிக்கை வைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.எனவே, அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. அவர் இருக்கும் இடம் தெரியும் வரை, இந்த மனுவை அடுத்த கட்டமாக விசாரிக்க முடியாது. வரும் 22ம் தேதிக்குள் அந்த தகவலை அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE