செய்தி செய்தி

தமிழ்நாடு

தென்னைக்கு 60 வயது வரை காப்பீடு! அழைக்கிறது வேளாண் துறை

Added : நவ 18, 2021
Share
Advertisement
சூலுார்: -'தென்னை மரங்களை பாதுகாக்க, காப்பீடு செய்து பயன்பெறலாம்' என, வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டத்தில், 88 ஆயிரத்து 467 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடக்கிறது. புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு இழப்பீடு பெற, காப்பீடு திட்டம் அமலில் உள்ளது.கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர்



சூலுார்: -'தென்னை மரங்களை பாதுகாக்க, காப்பீடு செய்து பயன்பெறலாம்' என, வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டத்தில், 88 ஆயிரத்து 467 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடக்கிறது. புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு இழப்பீடு பெற, காப்பீடு திட்டம் அமலில் உள்ளது.கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ரா தேவி அறிக்கை:குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை, நான்கு முதல் 15ம் ஆண்டு வரை காப்பீடு செய்து கொள்ளலாம். நெட்டை ரக மரங்களை, ஏழு முதல், 60ம் ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம்.ஒரு எக்டருக்கு, 175 மரங்களுக்கு மட்டும் காப்பீடு செய்ய முடியும். நான்கு முதல், 15 வயதுள்ள மரங்களுக்கு, ரூ.2.25ம், 16 முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு, ரூ.3.50ம் பிரிமீயத் தொகையாக செலுத்த வேண்டும்.இதற்கான வரைவோலையை, 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட், சென்னை' என்ற பெயரில் எடுக்க வேண்டும். 15 வயதுக்கு உட்பட்ட மரங்களுக்கு, ரூ.900, 16 முதல், 60 வயதுக்கு உட்பட்ட மரங்களுக்கு, ரூ. 1,750 வரை இழப்பீடு கிடைக்கும்.முன்மொழிவு படிவம், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், புல எண் வரைபடம், விவசாயி புகைப்படம், சுய அறிவிப்பு கடிதம், வட்டார வேளாண் உதவி இயக்குனர் சான்றிதழ், வங்கி பாஸ் புத்தக நகல் ஆகியவற்றை, வரைவோலையுடன் இணைத்து மேற்கூறிய நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X