ஒருங்கிணைப்பு குழு அமைக்க பா.ஜ., மேலிடம் முடிவு

Added : நவ 18, 2021
Share
Advertisement
பெங்களூரு:ஆட்சி இயந்திரத்தை முடுக்கி விட, அபிவிருத்தி பணிகளின் வேகத்தை அதிகரிப்பதுடன், அரசு மற்றும் பா.ஜ., தலைவர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், ஒழுங்கிணைப்பு கமிட்டி அமைக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. வரும், 2023 சட்டசபை, 2024 லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., மேலிடம், இப்போதிருந்தே தயாராகிறது. இத்தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி, கட்சியை மீண்டும்

பெங்களூரு:ஆட்சி இயந்திரத்தை முடுக்கி விட, அபிவிருத்தி பணிகளின் வேகத்தை அதிகரிப்பதுடன், அரசு மற்றும் பா.ஜ., தலைவர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், ஒழுங்கிணைப்பு கமிட்டி அமைக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

வரும், 2023 சட்டசபை, 2024 லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., மேலிடம், இப்போதிருந்தே தயாராகிறது. இத்தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி, கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த, திட்டம் வகுக்கிறது. ஆனால் கர்நாடகாவில், கட்சி மற்றும் அரசுக்கிடையே ஒருங்கிணைப்பு குறைவாக உள்ளது.

குறிப்பாக, பிட் காயின் வழக்கில், ஆளுங்கட்சியின் சிலரே, எதிர்க்கட்சியினருக்கு உதவியாக இருப்பதாக, முதல்வர் பசவராஜ் பொம்மை மூலம், பா.ஜ., மேலிடத்துக்கு தகவல் சென்றுள்ளது. எனவே, கட்சி மற்றும் அரசுக்கிடையே, ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் அவசியத்தை, மேலிடம் உணர்ந்துள்ளது.

அதே நேரத்தில், மத்திய, மாநில அரசுகளின் அபிவிருத்தி திட்டங்களின் வேகத்தை அதிகரிக்க, ஆட்சி இயந்திரத்தை அதிகரிப்பதுடன், கட்சிக்கும், அரசுக்கும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளளது.

முதல்வர் பசவராஜ பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் தலைமையிலான கமிட்டியில், யார், யார் இருக்க வேண்டும், அரசு, கட்சியின் பங்களிப்பு குறித்து, ஆலோசனை நடக்கிறது. விரைவில் கமிட்டி அமைக்க வேண்டுமென, மேலிடத்திடமிருந்து, முதல்வர், மாநில தலைவருக்கு உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைப்பு கமிட்டியின் பணிகள்:l மக்களுக்கான திட்டங்கள் வகுப்பதுl கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு தலைவர், இயக்குனர்களை மாற்றியமைப்பதுl எந்த அமைச்சராவது, புதிய திட்டங்களை அறிவிப்பதற்கு முன், அதன் சாதகம், பாதகங்களை பற்றி ஆலோசிப்பதுl அதிகாரிகள் இடமாற்றத்தை கண்காணிப்பது, கட்சி மற்றும் அரசின் இமேஜை அதிகரிப்பது
மாநிலத்தின் அபிவிருத்திக்கு ஏற்றபடி, திட்டங்கள் வகுப்பது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு மற்றும் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கு, கடிவாளம் போடுவது l அறிவிக்கப்பட்ட திட்டங்கள், சரியான நேரத்தில் பயனாளிகளை சென்றடையும்படி பார்த்துக்கொள்வது. பிரசாரம் மூலம், திட்டங்கள் பற்றி மக்களுக்கு தகவல் தெரிவிப்பது

நிர்வாக மேம்பாட்டுக்கு, அபிவிருத்திக்கு, கட்சியை பலப்படுத்தும் கருத்துகளுக்கு, முக்கியத்துவம் அளிப்பது l மக்களின் வீட்டு வாசலுக்கு, அரசின் சேவை சென்றடையும் நோக்கில், தொண்டர்களுடன், எம்.எல்.ஏ.,க்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X