கடனுக்காக விவசாயி மனைவியைதூக்கி செல்ல முயன்ற கொடூரர்கள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கொப்பல்:கடன் பணத்துக்காக, விவசாயி ஒருவரின் மனைவியை துாக்கிச் செல்ல முயற்சித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கொப்பல் காரடகியின், உளேனுர் கிராமத்தில் வசிக்கும் விவசாயி பசவராஜ் அகசரா, ஆம்பரம்மா தம்பதி, பயிரிடும் பணிக்காக உமேஷப்பா என்பவரிடம், மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். பல மாதங்களாகியும், கடனை திருப்பி தரவில்லை. இரு நாட்களுக்கு முன், உமேஷப்பா

கொப்பல்:கடன் பணத்துக்காக, விவசாயி ஒருவரின் மனைவியை துாக்கிச் செல்ல முயற்சித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொப்பல் காரடகியின், உளேனுர் கிராமத்தில் வசிக்கும் விவசாயி பசவராஜ் அகசரா, ஆம்பரம்மா தம்பதி, பயிரிடும் பணிக்காக உமேஷப்பா என்பவரிடம், மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். பல மாதங்களாகியும், கடனை திருப்பி தரவில்லை.

இரு நாட்களுக்கு முன், உமேஷப்பா சார்பில் தேவராஜ், பகீரப்பாவும் தங்கள் கூட்டாளிகளுடன், கடனை வசூலிக்க விவசாயி பசவராஜ் அகசரா வீட்டுக்கு வந்தனர். பணம் கொடுக்காததால், அவர்களின் நிலத்தை வசப்படுத்த சென்றனர். அப்போது ஆம்பரம்மா, நிலத்தை வசப்படுத்த, எதிர்ப்பு தெரிவித்ததால், கடனை வசூலிக்க வந்தவர்கள், ஆம்பரம்மாவை துாக்கி செல்ல முயற்சித்தனர்.

மனைவியை காப்பாற்றும் நோக்கில், விவசாயி பசவராஜ், வசூல்தாரர்களை தாக்க துவங்கியதால், கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் விவசாயி, அவரது மனைவி, குழந்தைகள் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்து, விவசாய தம்பதியர், காரடகி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X