பயங்கரவாதிகளின் சொர்க்கம் பாகிஸ்தான்:பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ்

Added : நவ 18, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:''பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் திகழ்கிறது; ஆனால் உலகுக்கு பெரும் தலைவலியாக உள்ளது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் கூறினார்.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சர்வதேச பயங்ரவாத எதிர்ப்பு தினத்தை அங்கு வசிக்கும் இந்தியர்கள் கடைப்பிடித்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் பேசியதாவது:உலகின் வளர்ச்சி, அமைதிக்கு,

வாஷிங்டன்:''பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் திகழ்கிறது; ஆனால் உலகுக்கு பெரும் தலைவலியாக உள்ளது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சர்வதேச பயங்ரவாத எதிர்ப்பு தினத்தை அங்கு வசிக்கும் இந்தியர்கள் கடைப்பிடித்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் பேசியதாவது:உலகின் வளர்ச்சி, அமைதிக்கு, பயங்கரவாதம் பெரும் பிரச்னையாக உள்ளது. உலகின் பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. பயங்கரவாதிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சொர்க்க பூமியாக உள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே பெரும் தலைவலியாக உள்ளது.
உலகில் நடந்துள்ள பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்திலும் பாகிஸ்தானில் தொடர்பு உள்ளது.அமெரிக்காவில் உள்ள சில அறிவுஜீவிகள், பாகிஸ்தானையும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யையும் ஆதரித்து வருகின்றனர்.'பயங்கரவாதிகளை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை' என, ஐ.எஸ்.ஐ., சொல்லும் பொய்யை, இந்த அறிவுஜீவிகள் நம்புகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X