பொது செய்தி

இந்தியா

8 / சினி கடலை

Added : நவ 18, 2021
Share
Advertisement
பெண்ணின் வாழ்க்கை படம்!நடிகை சோனு கவுடா நாயகியாக நடிக்கும், 'வெட்டிங் கிப்ஸ்' படத்துவக்க விழா, சமீபத்தில் நடந்தது. இதுவரை இவர் நடித்திராத கேரக்டரில் நடிக்கிறார். நவ நாகரிக வாழ்க்கையில் திளைக்கும் பெண்ணின் வாழ்க்கையில், திருமணத்துக்கு பின், என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பதை இந்த படம் விளக்குகிறது. சுதந்திரத்தை விரும்பும், 'அனைத்தும் நானே' என நினைக்கும்
 8 / சினி கடலை

பெண்ணின் வாழ்க்கை படம்!

நடிகை சோனு கவுடா நாயகியாக நடிக்கும், 'வெட்டிங் கிப்ஸ்' படத்துவக்க விழா, சமீபத்தில் நடந்தது. இதுவரை இவர் நடித்திராத கேரக்டரில் நடிக்கிறார். நவ நாகரிக வாழ்க்கையில் திளைக்கும் பெண்ணின் வாழ்க்கையில், திருமணத்துக்கு பின், என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பதை இந்த படம் விளக்குகிறது. சுதந்திரத்தை விரும்பும், 'அனைத்தும் நானே' என நினைக்கும் அகங்காரமான பெண்ணாக, சோனுகவுடா நடிக்கிறார். கணவன், மனைவி உறவுகள், சட்டம் தவறாக பயன்படுத்துவது என, பல விஷயங்கள் படத்தில் உள்ளது. நம்மை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களையே, மையமாக வைத்து, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

சரண் நம்பிக்கை!

நடிகர் சரண் நடிக்கும், 'அவதார புருஷா' திரைப்படத்தின், மாறுபட்ட போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் ஒவ்வொரு போஸ்டராக வெளியிடுகின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவரும் நடித்துள்ளார். படங்களில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கதாபாத்திரத்தில், சரண் நடித்துள்ளார். அவருக்கு கதையும், கதாபாத்திரமும் புதிதாம்.படத்தின் சென்சாரும் முடிந்துள்ளதால், விரைவில் திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் ஏற்பாடு செய்கின்றனர். இதுவும் கூட தன் வெற்றிப்படங்களின் வரிசையில் இடம் பெறுமென, சரண் நம்புகிறார்.

யுடியூப்பில் வௌியாகும் படம்!

இயக்குனர் பிரேம் இயக்கும், 'ஏக் லவ் யா' படத்தின் ஒரு பாடலை, தெலுங்கின் பிரபல பாடகி மங்க்லி மற்றும் கைலாஷ் கேர் பாடியுள்ளனர். இப்பாடலை, 'ஏ2 மியூசிக்' யு டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரக்ஷிதா தயாரித்துள்ளார். பிரேம் எப்போதும் தன் படத்தை பற்றி, ஆர்ப்பாட்டமாக பிரசாரம் செய்வது வழக்கம். இம்முறையும் கூட, பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்தினார். இது மங்க்லியின் முதல் கன்னட பாடல். தெலுங்கில் இவர் பாடிய, அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாகும். இவருக்கு கன்னடத்தில் நல்ல எதிர்காலம் உள்ளது.

சுதிப் நட்பு வட்டம் பெரிது!

சாண்டல்வுட் நடிகர் சுதீப்புக்கு, அனைத்து திரையுலகிலும் நெருக்கமான நண்பர்கள் உள்ளனர். பாலிவுட்டின் ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா தம்பதியும் கூட, சுதீப்புக்கு நல்ல நண்பர்கள். இவர்கள் பலமுறை சந்தித்துள்ளனர். இந்த தம்பதி, பெங்களூரின் சுதீப் வீட்டுக்கு வந்திருந்த போது, சிறப்பான சைவ விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த போட்டோக்கள், சோஷியல் மீடியாக்களில் வைரலானது. தற்போது இத்தம்பதி, சுதீப்புக்கு சிறப்பு பரிசுகள் அனுப்பியுள்ளனர். இவ்விஷயத்தை அவர் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர்களுடன் சேர்ந்துள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

படமாகிறது லாக் - டவுன்!
கன்னடத்தில், 'இன்' என்ற படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் பாவனா கவுடா நாயகியாக நடிக்கிறார். குக்கிராமத்தை சேர்ந்த நாயகி, பெங்களூருக்கு வந்து, வேலை தேடி தனியாக, அழகான வாழ்க்கை வாழ்க்கை வாழ்கிறார். அப்போது தான் கொரோனா தொற்று காலடி வைத்து, 'லாக் -- டவுன்' அமலாகிறது. மாதக்கணக்கில் ஒரு வீட்டுக்குள், தனியாக முடங்குகிறார். லாக் - டவுன் வரமா, சாபமா இதை அவர் எப்படி எதிர்க்கொண்டு, வாழ்க்கை நடத்துகிறார் என்பதே, 'இன்' படத்தின் சாராம்சமாகும். தனியாக வாழும் பெண்களுக்கு, இது தன்னம்பிக்கையை அளிக்குமாம்.

பி.சி.பாட்டீல் தயாரிப்பு!

யோகராஜ்பட் இயக்கத்தில், அமைச்சர் பி.சி.பாட்டீல் தயாரிக்கும் படத்துக்கு, 'கரடி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2016ல், 'ஹேப்பி நியூ ஹியர்' என்ற படத்தை, பி.சி.பாட்டீல் தயாரித்திருந்தார். அதற்கு பின் அவருக்கு படம் தயாரிப்பில், ஆர்வம் இருந்தும், நல்ல கதை, சரியான இயக்குனர் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கொரோனா வந்ததால், படத்தயாரிப்பை கிடப்பில் போட்டார். தற்போது இயக்குனர் யோகராஜ்பட், 'கரடி' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நடிகர் தர்ஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இவரை பார்க்க, பி.சி.பாட்டீல் ஆவலாக இருக்கிறாராம்.

மீண்டும் நடிக்கும் அவந்தி!

நவராத்ரி, ஒரடா ஐ லவ் யூ, திராடகா' உட்பட, தமிழ், கன்னடம், தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை ஹிருதயா அவந்தி, மண வாழ்வில் காலடி வைத்து உள்ளார். சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து விலகியிருந்த இவர், தொழிலதிபர் பரத் என்பவரை திருமணம் செய்துள்ளார். கடந்த வாரம் திருமணம் நடந்தது. பெங்களூரின் தனியார் ரிசார்ட்டில் வரவேற்பு நடந்தது. இதில் நண்பர்கள், திரையுலகினர் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X