மணிப்பூரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
இம்பால்:வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மேலும் பல தாக்குதல்களை நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.மணிப்பூரில் முதல்வர் பைரோன் சிங் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், சுரசந்திரபூர்

இம்பால்:வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மேலும் பல தாக்குதல்களை நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மணிப்பூரில் முதல்வர் பைரோன் சிங் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், சுரசந்திரபூர் மாவட்டத்தில் சமீபத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு தளபதி, அவரது மனைவி, மகன் மற்றும் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து உளவு அமைப்புகள் கூறியுள்ளதாவது:இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக, பி.எல்.ஏ., எனப்படும் மக்கள் விடுதலை ராணுவம் மற்றும் எம்.என்.பி.எப்., எனப்படும் மணிப்பூர் நாகா மக்கள் முன்னணி ஆகிய பயங்கரவாத அமைப்புகள் கூறியுள்ளன. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதியும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், மணிப்பூரில் வரும் காலத்தில் மேலும் பல தாக்குதல்களை நடத்த, இந்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு உளவு அமைப்புகள் கூறியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X