இப்படி ஆகிட்டாங்களே!

Added : நவ 18, 2021
Share
Advertisement
இப்படி ஆகிட்டாங்களே!என்னமோ, 25 தொகுதியிலும் போட்டிப் போடுவதாக சொன்ன புல்லுக்கட்டு கட்சி, அவங்களோட உள்ளாட்சிகளோட செல்வாக்கு என்னன்னு அலசி பார்த்ததாலே தெரிஞ்சிக்கிட்டாங்களாம். பழைய மைசூர் மண்டலம் மட்டுமே லாயக்குன்னு முடிவுக்கு வந்துட்டாங்களும். அதனாலே கித்துாருகர்நாடகா, கல்யாண கர்நாடகா மாவட்டங்களில் ஒண்ணு கூட உருப்படியா தேறாது என்பதால், சிந்தகி ஹனகல் தொகுதி

இப்படி ஆகிட்டாங்களே!

என்னமோ, 25 தொகுதியிலும் போட்டிப் போடுவதாக சொன்ன புல்லுக்கட்டு கட்சி, அவங்களோட உள்ளாட்சிகளோட செல்வாக்கு என்னன்னு அலசி பார்த்ததாலே தெரிஞ்சிக்கிட்டாங்களாம். பழைய மைசூர் மண்டலம் மட்டுமே லாயக்குன்னு முடிவுக்கு வந்துட்டாங்களும். அதனாலே கித்துாருகர்நாடகா, கல்யாண கர்நாடகா மாவட்டங்களில் ஒண்ணு கூட உருப்படியா தேறாது என்பதால், சிந்தகி ஹனகல் தொகுதி ரிசல்ட் ஆறாத ரணமா இருக்கிறதை நெனச்சி பார்த்து எம்.எல்.சி, தேர்தலில் 7, அல்லது 8 போட்டியிடலாமுன்னு முடிவுக்கு வந்துட்டாங்களாம். போட்டிப்போட மைசூரு, மாண்டியா, கோலாரு , துமகூரு, ஹாசன் மேலே பாசம் இருக்குதாம்!

கை 'சீட்' பெற திணறல்!

எம்.எல்.சி.,களின் தேர்தலில் கை கட்சியின் வி.ஐ.பி.,கள், 'சீட்' பெற லாபி நடத்தி வராங்க. இதில் முன்னாள் அமைச்சர் சாம்ராஜ்பேட்டைக்காரர் அவரது நண்பருக்கு சீட் கேட்டு டெல்லியில் தங்கி இருக்கிறார். அவர் எதிர்ப்பார்க்கும் அதே சீட் தமக்கு வேணும்னு மாநில செயல் தலைவரான சிறுபான்மை பிரிவுக்காரர் முயற்சித்து வராரு.விஜயபுரா தொகுதியில் மாஜி மந்திரியான லிங்காயத்தை இரண்டா பிரிக்க, கங்கனம் கட்டினவரு தனது தம்பிக்கு சீட் கேட்கிறாரு. அதே தொகுதியை மாஜி சட்டபேரவைப் தலைவரும் கேட்கிறாரு. மங்களூரு தொகுதிக்கு மாஜி மந்திரி ஒருத்தர் தனக்கு தரவேணும்னு மாநில கேபிட்டல் சிட்டியில் தங்கி இருக்கிறாரு.
கை கட்சியில் சீட் கேட்போர் பலரும் லாபி நடத்தி வருவதால் , வேட்பாளர் பட்டியலை வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில்தான் வெளியிடலாம்னு பேசிக்கிறாங்க!

ஹைஜாக் ஆப்ரேஷன்!

முதல்வர் பதவியில் கனவு காணும் கை கட்சியின் மைசூர்காரர், அடுத்த அசம்பிளி தேர்தலுக்குள் புல்லுக்கட்டு முக்கிய தலைவர்களை ஹைஜாக் செய்து எங்கள் கட்சியின் கதையை முடித்து விட செல்போனில் பேசி வருவதாக புல்லுக்கட்டின் மாஜி சி.எம்., அம்பலப்படுத்தியுள்ளார்.புல்லுக்கட்டு எம்.எல்.ஏ.,க்கள், சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவர்கள், கட்சியில் ஓட்டு செல்வாக்கு உள்ளவர்களா பார்த்து செல்போனில் பேசிய 'கால் ரிக்கார்ட்' எங்கள் வசம் இருக்குதெனவும் மீடியா காரர்களிடம் அவர் சொல்லியிருக்காரு. பிரைன் வாஷ் காட்சிகள் தொடருது.'யாருக்கு எங்கு அனுகூலமாகுதோ அங்கு போகட்டும்.' நாங்கள் எப்பவுமே மக்களை நம்பி, மக்களுக்காகவே இருக்கிறோம்னு அடித்து சொல்லியிருக்காரு!

நானும் வாரேன்!

கோவிலுக்கு மாலை அணிந்து பக்தியோடு பஸ்சில் சென்றவர்கள் மீது கோலாரின் கோளாறுகாரங்க கல் எறிந்து, கலவர பூமியாக மாற்றினாங்க. இதுக்கு நெறைய கண்டனங்கள் பறந்தன; பந்த் நடந்தது.நானும் வாரேன் பார்க்கலாம்னு ரா.சேனா தலைவரு அறிவிச்சாரு. மேலும் கலாட்டா ஜாஸ்தி ஆக விடாமல் நிறுத்த கோலாருக்குள்ளே ரா.சேனா காரர் நுழைய விடாமல் கலெக்டரு தடை விதித்திருக்காங்க.அத்தோடு, சேனா காரர் ஆடியோ, வீடியோ காட்சியிலும் உரையாடி பரப்பவும் தடை போட்டிருக்காங்க. இந்த தடை 18 டு 24 வரை அமலில் இருக்குமாம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X