முன்கள பணியாளர்களாக மயான ஊழியர்கள் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன்கள பணியாளர்களாக மயான ஊழியர்கள் அறிவிப்பு

Added : நவ 18, 2021
Share
சென்னை: மயான பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா தொற்று காலத்தில், தங்களை முழுமையாக ஈடுபடுத்திய, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து வரும், மயான பணியாளர்களின் உன்னதமான பணியை அங்கீகரிக்கும் வகையில், அவர்கள் முன்கள பணியாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மத்திய அரசின் முன்கள பணியாளர்கள் பட்டியலில் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு

சென்னை: மயான பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்று காலத்தில், தங்களை முழுமையாக ஈடுபடுத்திய, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து வரும், மயான பணியாளர்களின் உன்னதமான பணியை அங்கீகரிக்கும் வகையில், அவர்கள் முன்கள பணியாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மத்திய அரசின் முன்கள பணியாளர்கள் பட்டியலில் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். அவர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு, சம்பந்தப்பட்ட துறை வழியாக, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.இதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், நிதித்துறை ஒப்புதலுடன் வெளியிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X