சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

விளையாட்டுப் பிள்ளை!

Added : நவ 18, 2021
Share
Advertisement
விளையாட்டுப் பிள்ளை!மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு இளைஞர். சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர். இதனால், மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றபோது, கிரணுக்கு விளையாட்டுத் துறை இணை அமைச்சர் பதவியை வழங்கினார்.அவரும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை அடிக்கடி சந்தித்து ஊக்கப்படுத்தினார். அவர்களுக்கு

அக்கம் பக்கம்


விளையாட்டுப் பிள்ளை!


மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு இளைஞர். சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர். இதனால், மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றபோது, கிரணுக்கு விளையாட்டுத் துறை இணை அமைச்சர் பதவியை வழங்கினார்.அவரும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை அடிக்கடி சந்தித்து ஊக்கப்படுத்தினார். அவர்களுக்கு தேவையான
உதவிகளை செய்தார்.இவரது தீவிர முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா கணிசமான பதக்கங்களை வென்றது.இதற்கிடையில், ஜூலையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில், கிரணுக்கு கேபினெட் அமைச்சராக பதவி உயர்வு கிடைத்தது. சட்டத் துறை அமைச்சராக்கப்பட்டார். அனுராக் தாக்குர் விளையாட்டுத்துறை அமைச்சரானார்.
ஆனாலும், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று திரும்பிய இந்திய வீரர் மற்றும் வீராங்கனையர், கிரண் செய்த உதவியை மறக்காமல், அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சமீபத்தில், 'பத்ம' விருது வாங்க வந்திருந்த பேட்மிண்டன் வீராங்கனை சிந்து, விழாவுக்கு வந்திருந்த கிரண் ரிஜிஜுவை பார்த்ததும், ஓடோடி வந்து, அவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.அங்கு வந்திருந்த மற்ற விளையாட்டு பிரபலங்களும் கிரணை சூழ்ந்து பல்வேறு விஷயங்களை பேசினர். கிரணும் அவர்களிடம் விளையாட்டு தொடர்பான விஷயங்களை ஆர்வமாக பேசினார். இதைப் பார்த்த சக அமைச்சர்கள், 'கிரணுக்கு, சட்டத் துறையை விட, விளையாட்டுத் துறையில் தான் ஆர்வம் அதிகம்
போலிருக்கிறது' என, தங்களுக்குள் பேசினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X