கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில்களின் தணிக்கை அறிக்கை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை: அனைத்து கோவில்களின் தணிக்கை அறிக்கையை, இரண்டு வாரங்களில் தாக்கல் செய்வதாக, தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள கோவில்களின் கணக்கு வழக்குகளை, மத்திய கணக்கு தணிக்கை குழு வாயிலாக தணிக்கை மேற்கொள்ளக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு

சென்னை: அனைத்து கோவில்களின் தணிக்கை அறிக்கையை, இரண்டு வாரங்களில் தாக்கல் செய்வதாக, தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள கோவில்களின் கணக்கு வழக்குகளை, மத்திய கணக்கு தணிக்கை குழு வாயிலாக தணிக்கை மேற்கொள்ளக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில், விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, கோவில்களின் தணிக்கை அறிக்கையை, இரண்டு வாரங்களில் தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.கோவில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக தாக்கல் செய்த வழக்கும், சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அறங்காவலர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளதாகவும், மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என்றும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.இதையடுத்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X