செய்தி செய்தி

தமிழ்நாடு

வால்பாறை ரோட்டில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஆனைமலை: பொள்ளாச்சி, ஆழியாறு அருகே, வால்பாறை ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.பொள்ளாச்சி அடுத்த, வால்பாறை முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால், தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆழியாறு, வால்பாறை சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.இதனால், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் பல



ஆனைமலை: பொள்ளாச்சி, ஆழியாறு அருகே, வால்பாறை ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.பொள்ளாச்சி அடுத்த, வால்பாறை முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால், தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆழியாறு, வால்பாறை சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.இதனால், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் பல இடங்களில் மண் சரிவு ஏற்படுவதுடன், மரங்களும் சாய்ந்து விடுகிறது.இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகே, வால்பாறை ரோட்டில் இரண்டு இடங்களில், ஐந்து மீட்டர் அளவுக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.இதையடுத்து, வால்பாறைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வால்பாறை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் உமாமகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, 'மெகா' பள்ளத்துக்கு மண், மெட்டல் கலவை கொட்டி, ரோட்டை தற்காலிகமாக சீரமைத்து, போக்குவரத்தை அனுமதித்தனர். பள்ளம் ஏற்பட்டதால், ஐந்து மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.உதவி கோட்டப்பொறியாளர் உமாமகேஸ்வரி பேசுகையில், ''வால்பாறை ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளம் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது. இங்கு, மழைநீர் எளிதாக கடந்த செல்ல சிறுபாலம் இல்லாததால், மழைநீர் தேங்கி மண்ணுக்குள் புகுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.சிறுபாலம் அமைக்க, அரசிடம் நிதி கேட்டு கருத்துரு அனுப்பியுள்ளோம். விரைவில் நிதி கிடைத்ததும், சிறுபாலம் அமைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X