செய்தி செய்தி

தமிழ்நாடு

கடின பாடங்களை எளிதாக்கும் வீடியோ!

Added : நவ 18, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை, திருமூர்த்திநகரில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் வாயிலாக தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்போது, 3 மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில், கடினமான பகுதிகளை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ தயாரிக்கப்படுகிறது.

உடுமலை: உடுமலை, திருமூர்த்திநகரில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் வாயிலாக தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்போது, 3 மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில், கடினமான பகுதிகளை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ தயாரிக்கப்படுகிறது. பாட வாரியான இந்த வீடியோக்கள், 'தீக் ஷா' மற்றும் 'நிஷ்தா' ஆகிய செயலியில் பதிவேற்றம் செய்யப்படவும் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆசிரியர்கள், இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, மதிப்பீட்டு வினாக்கள் மற்றும் கட்டகங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் வீடியோ தயாரிப்பும் முடிவடைந்துள்ளது.பயிற்சி நிறுவனத்தார் கூறுகையில், 'கதைகள், ஆர்வமூட்டும் செயல்பாடுகள் மற்றும் 'ஸ்கிரிப்ட்'களை உள்ளடக்கி, வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மாணவர்களை கூர்ந்து கவனிக்கச் செய்ய இயலும்.மேலும், பாடங்களில் எளிதாக மனதில் பணியும். இத்தகைய வீடியோக தயாரிப்பு பணியில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான, பணி முடியும் தருவாயில் உள்ளது. தற்போது, எடிட்டிங் பணி நடைபெறுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X