செய்தி செய்தி

தமிழ்நாடு

கொண்டைக்கடலை மகசூல் விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், அக்., பெய்யும் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரியாக சாகுபடி செய்யப்படும் கொண்டைக்கடலை, ஜன., மாதம் அறுவடை செய்யப்படுகிறது. நடப்பு சீசனில், விதைப்பு முடிந்து, செடிகளின் வளர்ச்சி தருணத்தில், தொடர் மழை பெய்து வருகிறது.விவசாயிகள் கூறியதாவது: கொண்டைக்கடலை பயறு, புரதச்சத்து உணவு பொருளாக உள்ளதால், மாவு உற்பத்திக்கு பெரிதும்

உடுமலை: உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், அக்., பெய்யும் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரியாக சாகுபடி செய்யப்படும் கொண்டைக்கடலை, ஜன., மாதம் அறுவடை செய்யப்படுகிறது.
நடப்பு சீசனில், விதைப்பு முடிந்து, செடிகளின் வளர்ச்சி தருணத்தில், தொடர் மழை பெய்து வருகிறது.விவசாயிகள் கூறியதாவது: கொண்டைக்கடலை பயறு, புரதச்சத்து உணவு பொருளாக உள்ளதால், மாவு உற்பத்திக்கு பெரிதும் பயன்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கொண்டைக்கடலை வியாபாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, பெய்து வரும் தொடர் மழையால், கொண்டைக்கடலை சாகுபடி பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவின் தாக்கம் இருந்தால் மகசூலை எதிர்பார்க்கலாம். விளைநிலங்களில், தண்ணீர் தேங்கியுள்ளதால், செடிகளின் பாதிப்பு குறித்து தெரியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X