சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பதவியை விட்டு தர பழனிசாமி திட்டம்!

Added : நவ 18, 2021
Share
Advertisement
பதவியை விட்டு தர பழனிசாமி திட்டம்!''மக்கள் தப்பு செஞ்சா, அரசாங்கம் தட்டிக் கேட்கும்... அரசாங்கமே தப்பு செய்தா, யாருங்க தட்டி கேட்கிறது...'' என்றபடியே பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.''பீடிகை போடாம மேட்டருக்கு வாரும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''சென்னையில குளத்துக்குள்ள மக்கள் வீடு கட்டியிருக்காங்க... அதான், வெள்ளத்துல மிதக்குறாங்கன்னு ஆளாளுக்கு


 டீ கடை பெஞ்ச்


பதவியை விட்டு தர பழனிசாமி திட்டம்!



''மக்கள் தப்பு செஞ்சா, அரசாங்கம் தட்டிக் கேட்கும்... அரசாங்கமே தப்பு செய்தா, யாருங்க தட்டி கேட்கிறது...'' என்றபடியே பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.
''பீடிகை போடாம மேட்டருக்கு வாரும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சென்னையில குளத்துக்குள்ள மக்கள் வீடு கட்டியிருக்காங்க... அதான், வெள்ளத்துல மிதக்குறாங்கன்னு ஆளாளுக்கு 'மீம்ஸ்' போடுறாங்களே...

''கோவையில, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் வேலுமணி ஜெயிச்ச தொண்டாமுத்துார் தொகுதியில, போன ஆட்சியில, குளத்துப்பாளையத்துல, செங்குளத்தை ஒட்டி குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்ட ஆரம்பிச்சாங்க...

''இந்த குடியிருப்புக்கு போறதுக்கு, குளத்துக்குள்ள ரோடு போடவும் மாநகராட்சி 'பிளான்' போட்டு குடுத்திருக்கு... ஆனா, நீர் நிலையை ஆக்கிரமிச்சு சாலையான்னு, பொதுப் பணித் துறை தடையின்மை சான்று வழங்காம 'பெண்டிங்'குல போட்டு வச்சிருக்குதுங்க...

''இதுக்கு காரணமான அதிகாரி, 'மாஜி' சொல்றதை தட்டாம கேட்பார்... அதுக்காகவே, அவருக்கு பணி நீட்டிப்பு குடுத்தாங்க... இப்ப, அவரை சென்னைக்கு மாத்தியிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''குமார் இங்கன உட்காரும்...'' என, நண்பரை அமர வைத்த அண்ணாச்சியே, ''சட்டவிரோத மசாஜ் சென்டர்களை கணக்கெடுத்துட்டு இருக்காவ வே...'' என்றார்.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை, வேளச்சேரியில சமீபத்துல ஒரு சட்டவிரோத மசாஜ் சென்டர்ல, ஒரு கும்பல் கத்தியை காட்டி பணம் பறிச்சதுல்லா... அந்த கும்பலுக்கு சில கட்சியினர் ஆதரவா வந்தாலும், அதை கண்டுக்காம ஆறு பேரை போலீசார் புடிச்சு உள்ள தள்ளிட்டாவ வே...

''இதுல என்ன கூத்துன்னா, சட்டவிரோத மசாஜ் சென்டர்கள் நடத்த சட்டம் - ஒழுங்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தா, பணம் பறிப்பு சம்பவமே நடந்திருக்காதுன்னு உளவுப்பிரிவு போலீசார், மேலிடத்துக்கு அறிக்கை குடுத்திருக்காவ...

''இதனால, அடையாறு காவல் மாவட்டத்துல, சட்ட விரோதமா எத்தனை மசாஜ் சென்டர்கள் இயங்குதுன்னு ஒரு 'டீம்' விசாரணை நடத்திட்டு இருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.

''தன் பதவியை விட்டுத் தர முடிவு செய்துட்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''இந்தக் காலத்துல பதவி வேண்டாம்னு மறுக்கிறது யாருங்க...'' என, வியப்புடன் கேட்டார் அந்தோணிசாமி.

''நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சீக்கிரமே தேர்தல் நடக்கப் போறது... இதுல, தன் சொந்த மாவட்டமான சேலத்துல கணிசமான அளவு ஜெயிச்சாகணும்னு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நெனைக்கறார் ஓய்...

''இப்ப, சேலம் புறநகர் மாவட்டச் செயலரா பழனிசாமியும், மாநகர மாவட்டச் செயலரா முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலமும் இருக்கா... இனி, தி.மு.க., மாதிரி அ.தி.மு.க.,வுலயும் கிழக்கு, மேற்கு, மாநகரம்னு பல மாவட்டங்களா கட்சியை பிரிச்சு, தனித்தனியா செயலர்களை நியமிக்க முடிவு செய்திருக்கார்...

''இணை ஒருங்கிணைப்பாளரான மாநில பதவியை மட்டும் வச்சுண்டு, தன் மாவட்டச் செயலர் பதவியை விட்டு தரவும் முடிவு பண்ணியிருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X