பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 கொடுங்க! அரசுக்கு எம்.எல்.ஏ., ஜெயராமன் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 கொடுங்க! அரசுக்கு எம்.எல்.ஏ., ஜெயராமன் வலியுறுத்தல்

Added : நவ 18, 2021
Share
பொள்ளாச்சி: ''பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு, பொங்கல் தொகுப்புடன், 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.பொள்ளாச்சி அன்னபூரணியம்மாள் லே - அவுட்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.இந்த அங்கன்வாடி மையத்தை, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், பயன்பாட்டிற்கு திறந்து



பொள்ளாச்சி: ''பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு, பொங்கல் தொகுப்புடன், 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அன்னபூரணியம்மாள் லே - அவுட்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.இந்த அங்கன்வாடி மையத்தை, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., ஜெயராமன் கூறியதாவது:முன்னாள் முதல்வர்பழனிசாமி, கடந்தாண்டு, 2,500 ரூபாய், கரும்பு, பொங்கல் பரிசும் வழங்கினார்.ஆனால், தற்போது, மஞ்சள், மிளகாய் பொடி என அறிவித்து இருப்பது, மக்களுக்கு என்ன நன்மை என தெரியவில்லை.பருவமழை பாதிப்பு, கொரோனாவும் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொங்கல் தொகுப்புடன், 5,000 ரூபாய் வழங்க அரசு முன்வர வேண்டும்.மக்கள் வேலைவாய்ப்பு, வருவாய் இழந்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமானால், அதிகபட்ச தொகை வழங்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில், மின்துறை அமைச்சர், ஒன்றரை லட்சம் மனுக்கள் மின்னல் வேகத்தில் பெற்றுள்ளார்.ஒரு வார காலத்தில் பெறப்பட்ட மனுக்கள், வருவாய் கிராமம் வாரியாக, எந்த மாதிரியாக மனுக்கள் வந்துள்ளது என தனித்தனியாக அறிவித்து தீர்வு காண வேண்டும்.இதுபோன்று செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், பொதுவாக ஒன்றரை லட்சம் மனுக்கள் பெற்றுள்ளோம் என கூறுவதும், அ.தி.மு.க., ஆட்சியின் மீது பழி போடுவதும், விளம்பரத்துக்காக என்பது அனைவருக்கும் தெரியும். இதை கோவை மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்.மக்களுக்காக, அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்து நிதி ஒதுக்கப்பட்ட பல திட்டங்கள் தற்போது, முடங்கியுள்ளன. இதையும் மக்கள் அறிவர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X