துளிகள் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : நவ 18, 2021
Share
Advertisement
பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கைமடத்துக்குளம் தாலுகா மா.கம்யூ., கட்சியினர், நேற்று பேரூராட்சி அதிகாரிகளிடம் கொடுத்த மனு:மடத்துக்குளம் பேரூராட்சியில், 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இதில் 70 சதவீத மக்கள் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள், பெரும்பான்மையோர் விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.பேரூராட்சி பகுதியில், போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால்,

பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கைமடத்துக்குளம் தாலுகா மா.கம்யூ., கட்சியினர், நேற்று பேரூராட்சி அதிகாரிகளிடம் கொடுத்த மனு:மடத்துக்குளம் பேரூராட்சியில், 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இதில் 70 சதவீத மக்கள் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள், பெரும்பான்மையோர் விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.பேரூராட்சி பகுதியில், போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால், சராசரி வருமானம் மிகக்குறைவாக உள்ளது. இப்பிரச்னை கொமரலிங்கம் பேரூராட்சி பகுதியிலும் இருந்தது.இப்பிரச்னைக்கு தீர்வாக தமிழக அரசு அந்த பேரூராட்சிக்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை, விரிவுபடுத்தி உள்ளது. அது போல, மடத்துக்குளம் விவசாய கூலித்தொழிலாளர்களின், வாழ்வாதாரத்தை காப்பாற்ற, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மடத்துக்குளம் பேரூராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, மனுவில், தெரிவித்திருந்தனர்.பயிற்சி கிடைக்க காத்திருப்பு ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில், தளிஞ்சி, மஞ்சம்பட்டி. கோடந்துார், ஆட்டுமலை, குருமலை என, 14 பழங்குடியினர் 'செட்டில்மென்ட்'கள் உள்ளன.இங்குள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அரசால் பல்வேறு திட்டங்கள், செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. மேலும், சிறு வனப் பொருட்கள் சேகரிப்பு, விளைநிலங்களில் பயிரிடுதல், கால்நடைகள் வளர்த்தல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், சிலர், பால் உற்பத்தி மற்றும் இயற்கை உரத்துக்காக, கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இனிவரும் நாட்களில், மழையின் தாக்கம் குறைந்து வெயில் அதிகரிக்கும் என்பதால், தீவன பாதிப்பு ஏற்படும் என்பதால், 'அசோலா' வளர்ப்பு பயிற்சி அளிக்க, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கால்நடை துறையினர் கூறுகையில், 'தற்போது மழையின் தாக்கம் இருந்தாலும், வறட்சி காலத்தில் தீவனப் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு அசோலா வளர்ப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில், உரிய பயிற்சி அளிக்கப்படும்,' என்றனர்.வேளாண் கட்டடத்தில் ஆய்வுகிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அலுவலகம் செயல்படுகிறது. பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த அலுவலகம், 1.75 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்டுள்ளது.புதிதாக ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக கட்டுமானப்பணி, கடந்த ஆண்டு துவங்கியது. பணிகள் நிறைவடைந்து, திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ளது. இக்கட்டடத்தில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களும், உரம் மற்றும் விதை இருப்பு மற்றும் விற்பனை கிடங்குகளும் செயல்பட உள்ளன. இந்நிலையில், நேற்று, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்தார். ஒன்றிய தலைவர் நாகராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இக்கட்டடத்தை, கோவை வரும் முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுபொள்ளாச்சி, போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை அம்சவேணி வரவேற்றார். ஊராட்சி தலைவர் ராஜா, குழந்தைகள் தின விழா குறித்து பேசினார்.'ஆன்லைன் கல்வி ரேடியோ'வின், குழந்தைகள் தின சிறப்பு செயல்பாடுகளில் பங்கேற்று பரிசுகளை பெற்ற, 10 மாணவ, மாணவியருக்கு பரிசாக கேடயங்கள், மெடல்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கோவையில் உள்ள, அகில இந்திய வானொலி நிலையம் சென்று, 'பல் சுவை நிகழ்ச்சிகள்' என்ற தலைப்பில் பங்கேற்ற, 10 மாணவர்களுக்கு ரொக்க பரிசாக, 300 ரூபாய் வழங்கப்பட்டது. அதில், 1,330 திருக்குறள்கள் பிழையின்றி எழுதிய மாணவி லத்திகாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பட்டதாரி உதவி ஆசிரியை கனகலட்சுமி, குழந்தைகள் தினத்தின் சிறப்புகள், 'ஆன்லைன் கல்வி ரேடியோ'வின் சிறப்புகள், கல்வித்தொலைக்காட்சியின் பயன்பாடு, மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். பட்டதாரி ஆசிரியர் ரபேல்ராஜ் நன்றி கூறினார்.மழையால் இடிந்த வீடுகள் மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அப்பகுதியில், 46 மி.மீ, மழையளவு பதிவாகியிருந்தது.தொடர் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்நிலையில், அமராவதி சர்க்கரை ஆலை பகுதியில், பாலு என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவர் இரவு நேரம் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் கிடைத்த வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டுச் சென்றனர்.டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றணும்பொள்ளாச்சி நகராட்சி குறுகலான ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக, சப் - கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பழனிக்குமார் புகார் மனு கொடுத்தார்.அதில், நகராட்சி, 16வது வார்டுக்கு உட்பட்ட கோணப்பர் வீதியில், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி மின்வாரியம் டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளது. இதனால், வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நெரிசல் ஏற்படுகிறது. அவசர சூழலில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லக் கூட சிரமமாக உள்ளது. எனவே, டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும், என, குறிப்பிட்டுள்ளார்.தி.மு.க.,வினர் திடீர் சுறுசுறுப்புஉள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதையடுத்து, தி.மு.க.,வினர் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர். வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பும் தி.மு.க.,வினர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, கட்சி அலுவலகத்தில் வழங்க வேண்டும்.பொதுப்பிரிவில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், ரூ.5,000, பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவில் போட்டியிடுபவர்கள், 2,500 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இன்று (19ம் தேதி) மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும், என, வால்பாறை தி.மு.க., நகர பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.கொசு ஒழிப்பு பணி தீவிரம் தளி பேரூராட்சியிலுள்ள, 15 வார்டுகளில், 1,763 குடியிருப்பு வீடுகள், அதிகப்படியான வணிக நிறுவனங்கள் உள்ளன. அப்பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பேரூராட்சி ஊழியர்கள், கால்வாய்களில் உள்ள அடைப்புகள் சீரமைத்தல், கொசு மருந்து அடித்தல், வீடுகள்தோறும் சென்று ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பேரூராட்சி அலுவலர்கள் கூறியதாவது:பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் 'மாஸ் கிளீனிங்' பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தங்களது வீடுகளில், சுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்புற பகுதியில் வழியும் நீரில், 'ஏடிஸ்' கொசுவின் புழு இருக்கும். அதனால், தினமும் அந்த நீரை அகற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, டயர் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்வால்பாறை ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி, சிறப்பு குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் செந்தில்குமார் வரவேற்றார். வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 35 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, வீல்சேர், காது கேட்கும் கருவி, சி.பி., சேர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர்கள் ரவிச்சந்திரன், சுகந்தி, சிறப்பாசிரியர்கள் பிரபா, தேன்மொழி, முத்துக்குமார், ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X