ஸ்ரீநகர் என்கவுன்டர்: விசாரிக்க உத்தரவு

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில், ஒரு தொழிலதிபர் மற்றும் டாக்டர், 'என்கவுன்டரில்' கொல்லப்பட்டது தொடர்பாக, கூடுதல் மாவட்ட கலெக்டர் தலைமையில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹைதர்போராவில், பயங்கரவாதிகளுக்கு எதிராக போலீசார் சமீபத்தில் நடத்திய என்கவுன்டரில் தொழிலதிபர் அல்டாப் பட், பல் மருத்துவர்
 ஸ்ரீநகர் என்கவுன்டர்: விசாரிக்க உத்தரவு

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில், ஒரு தொழிலதிபர் மற்றும் டாக்டர், 'என்கவுன்டரில்' கொல்லப்பட்டது தொடர்பாக, கூடுதல் மாவட்ட கலெக்டர் தலைமையில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹைதர்போராவில், பயங்கரவாதிகளுக்கு எதிராக போலீசார் சமீபத்தில் நடத்திய என்கவுன்டரில் தொழிலதிபர் அல்டாப் பட், பல் மருத்துவர் முடாசிர் குல் கொல்லப்பட்டனர்.கொந்தளிப்புஇந்த என்கவுன்டரின்போது அமிர் மாக்ரே மற்றும் ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர். இதில் அமிர் மாக்ரே, டாக்டர் முடாசிர் குல்லிடம் உதவியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
தொழிலதிபர் மற்றும் டாக்டரை, பயங்கரவாதிகள் கொன்றதாக போலீஸ் தரப்பில் முதலில் கூறப்பட்டது. பின், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையின்போது குறுக்கே வந்ததால், அவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு போலீசார் கொலை செய்ததாக, இருவரின் குடும்பத்தாரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, கூடுதல் மாவட்ட கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்துவதற்கு ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம்உத்தரவிட்டது.''குடும்பத்தாரின் கோரிக்கைகள் குறித்து கவனிக்கப்படும். இதில் ஏதாவது தவறு நடந்திருந்தால், சம்பந்தபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஜம்மு - காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி., தில்பாக் சிங் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஹைதர்போரா என்கவுன்டரில் இரண்டு பேர் கொல்லப்பட்டதை கண்டித்து, நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு ஹூரியத் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. போராட்டம்உயிரிழந்த இருவரின் குடும்பத்தார், ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வீட்டுக் காவலில் மெஹபூபா?

மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:என்னை மீண்டும் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். எங்கள் கட்சி செய்தி தொடர்பாளர்கள் சுஹைல் புகாரி, நஜ்மு சாஹிப் ஆகியோரை கைது செய்துள்ளனர். ஹைதர்போரா என்கவுன்டர் விவகாரத்தில் கேள்வி எழுப்பியதால் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X