சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கொடுப்பது நம் மரபில் உள்ள குணம்!

Added : நவ 18, 2021
Share
Advertisement
பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என கூறுகிறார், சுவாமி சுகபோதானந்தா: உலகின் புகழ் பெற்ற பணக்காரர்களுள் ஒருவர் வாரன் பபட். தலைசிறந்த முதலீட்டாளர்களுள் முன்னோடி; ஷேர் மார்க்கெட் சிங்கம். அவரின் சொத்து மதிப்பு, பல லட்சம் கோடி ரூபாய். அதில் தன் பிள்ளைகளுக்கு என பிரித்துக் கொடுத்தது, 1 சதவீதம் தான். எஞ்சிய அனைத்தையும் தர்ம காரியங்களுக்கு என எழுதி வைத்து விட்ட அவர், அதில் ஒரு
சொல்கிறார்கள்

பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என கூறுகிறார், சுவாமி சுகபோதானந்தா: உலகின் புகழ் பெற்ற பணக்காரர்களுள் ஒருவர் வாரன் பபட். தலைசிறந்த முதலீட்டாளர்களுள் முன்னோடி; ஷேர் மார்க்கெட் சிங்கம். அவரின் சொத்து மதிப்பு, பல லட்சம் கோடி ரூபாய். அதில் தன் பிள்ளைகளுக்கு என பிரித்துக் கொடுத்தது, 1 சதவீதம் தான். எஞ்சிய அனைத்தையும் தர்ம காரியங்களுக்கு என எழுதி வைத்து விட்ட அவர், அதில் ஒரு பகுதியை அதற்காக செலவிடவும் துவங்கி விட்டார். அவர் உலகம் முழுதும் உள்ள பணக்கார பெற்றோருக்கு சொல்லும் அறிவுரை ஒன்று தான்...'உங்கள் பிள்ளைகள் என்ன செய்ய ஆசைப்பட்டாலும், அதை செய்யுமளவுக்கு மட்டும் அவர்களுக்கு பணம் கொடுங்கள்.

ஆனால், அவர்கள் எதுவுமே செய்யத் தேவை இல்லை என்ற அளவுக்கு, பணத்தை விட்டு சென்று விடாதீர்கள்' என்பது தான் அது.இப்படி ஒரு கருத்தை நம்மூரில் சொன்னால், 'அதெல்லாம் சரி தான்... வெளிநாட்டில் வாரன் சொல்வது போல இருப்பது எளிது... அங்கே கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவை தரமாக இருக்கும். முதியோருக்கு உதவித் தொகை, காப்பீடு, தனி வீடு போன்றவற்றை எல்லாம் அரசே பார்த்துக் கொள்ளும்; அதனால், அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலையின்றி, தான தர்மங்கள் செய்யலாம். 'ஆனால், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில், அரசால் இப்படி எல்லாருக்கும் செய்து தர முடியாதே... அது போக, இங்கே கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. 'சம்பாதிப்பதே போதவில்லை என்ற நிலையில், தர்மம் செய்ய எப்படி மனம் வரும்?' என, சிலர் எதிர்கருத்து சொல்வர்.
அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளைச் சேர்ந்தோரே, 'பணம் பணத்தோடு மட்டுமே சேர்ந்து கொண்டிருக்கிறது' என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.ஆனால், நம் நாட்டில் அப்படியில்லை. ஈகை எனப்படும் பிறருக்கு உதவும் பண்பு, நம் மரபில் இருக்கிறது; மரபணுவில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.'இரைக்க இரைக்கத் தான் சுரக்கும்; கொடுக்க கொடுக்கத் தான் கிடைக்கும்' என்பதன்படி வாழ்ந்தோரின் வழி வந்தோர் நாம்.பறம்பு மலையை ஆண்ட வேள்பாரி, கொல்லி மலையை ஆண்ட வவ்வில் ஓரி துவங்கி, தலையேழு வள்ளல், கடையேழு வள்ளல் பெருமக்களைக் கொண்டாடுவோர் நாம். விருந்தோம்பலின் மகிமையை பேசும் இலக்கியங்களை பெருமைகளாகப் போற்றுவோர் நாம். எனவே, கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அனைவரும் பெற வேண்டும். இயன்ற அளவு பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X