சில வரி செய்திகள்...:இந்தியா

Added : நவ 18, 2021
Share
Advertisement
திருமண ஊர்வலத்தில் கொலைலக்னோ: உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் சதீஷ் என்பவருக்கு, நேற்று முன்தினம் இரவு திருமணம் நடந்தது. அப்போது, ஆட்டம் - பாட்டம் என, திருமண ஊர்வலம் விமரிசையாக நடந்தது. அப்போது பிரிஜேஷ் குமார் என்பவர், தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் சுட்டார். இதில், கமலேஷ் என்பவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். பிரிஜேஷ் அங்கிருந்து தப்பித்தார்.
 சில வரி செய்திகள்...:இந்தியா

திருமண ஊர்வலத்தில் கொலை
லக்னோ: உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் சதீஷ் என்பவருக்கு, நேற்று முன்தினம் இரவு திருமணம் நடந்தது. அப்போது, ஆட்டம் - பாட்டம் என, திருமண ஊர்வலம் விமரிசையாக நடந்தது. அப்போது பிரிஜேஷ் குமார் என்பவர், தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் சுட்டார். இதில், கமலேஷ் என்பவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். பிரிஜேஷ் அங்கிருந்து தப்பித்தார். அவரை தேடும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
லஞ்சம் பெற்ற வழக்கறிஞர் கைது
வல்சத்: குஜராத்தின் வல்சத் மாவட்டத்தில், மதுபான கடை உரிமையாளரிடம் லஞ்சமாக 1.5 லட்சம் ரூபாய் கேட்டு யேஷா படேல் என்ற பெண் போலீஸ் எஸ்.ஐ., மிரட்டி உள்ளார். பின், யேஷா படேல் சார்பில், வழக்கறிஞர் பாரத் யாதவ், கடை உரிமையாளரிடம் இருந்து அந்த லஞ்சத்தை பெற்றுள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை, ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தெலுங்கானா முதல்வர் 'தர்ணா'
ஐதராபாத்: நெல் கொள்முதல் விவகாரத்தை வைத்து மத்திய அரசை, தெலுங்கானாவில் ஆளும் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்து முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள் தலைநகர் ஐதராபாதில் 'தர்ணா' போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், விவசாயிகளிடம் இருந்து உடனடியாக நெல் கொள்முதல் செய்யக்கோரியும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
நாவலாசிரியரான மத்திய அமைச்சர்
புதுடில்லி: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'லால் சலாம்' என்ற நாவலை எழுதி உள்ளார். 2010 ஏப்ரல் 6ம் தேதி, சத்தீஸ்கரின் தன்டேவாடா பகுதியில், நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உயிரிழந்தனர். உயிர் தியாகம் செய்த அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஸ்மிருதி இரானி எழுதி உள்ள இந்த நாவல், வரும் 29ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. இது ஸ்மிருதி இரானி எழுதி உள்ள முதல் நாவல்.

எம்.எல்.ஏ., மீது பாலியல் புகார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கோகுண்டா சட்டசபை தொகுதியை சேர்ந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரதாப் பீல் மீது, 10 மாதங்களுக்கு முன் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவர் மீது மற்றொரு பெண் நேற்று பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதைஅடுத்து போலீசார் விசாரணையை துவக்கிஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X