பொது செய்தி

இந்தியா

தகவல் அறியும் உரிமை சட்டம் பெண்களிடம் ஆர்வம் குறைவு

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுடில்லி:தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதில் பெண்களிடம் போதிய விழிப்புணர்வும், ஆர்வமும் குறைவாக உள்ளது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, தேவையான தகவல்களை பெற்றவர்களின் விபரங்களை பாலின அடிப்படையில் வழங்கும்படி, மத்திய அரசு பணியாளர் நியமன அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தார். அதன்படி

புதுடில்லி:தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதில் பெண்களிடம் போதிய விழிப்புணர்வும், ஆர்வமும் குறைவாக உள்ளது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, தேவையான தகவல்களை பெற்றவர்களின் விபரங்களை பாலின அடிப்படையில் வழங்கும்படி, மத்திய அரசு பணியாளர் நியமன அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தார். அதன்படி அமைச்சகம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2013, ஏப்ரல் 22 முதல் நடப்பு 2021, நவம்பர் 12 வரை தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக, வலைதளத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 107 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 11 ஆயிரத்து 376 விண்ணப்பங்களை பெண்கள் அளித்துள்ளனர். அதேசமயம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 731 விண்ணப்பங்களை ஆண்கள் வழங்கியுள்ளனர்.
இந்தாண்டு, ஜனவரி 1 முதல் நடப்பு நவம்பர் 12 வரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை வழங்கக் கோரி, 15 ஆயிரத்து 986 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் பங்கு முறையே, 14 ஆயிரத்து 479 மற்றும் 1,507 ஆக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு நிர்வாகம், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை தொடர்பான தகவல்களை சாமானிய மக்களும் சுலபமாகப் பெற, தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டம் குறித்து ஆண்களிடம் உள்ள விழிப்புணர்வு போல பெண்களிடம் இல்லை. ''எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பெண்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, லோகேஷ் பத்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X