கர்தார்பூர் குருநானக் சமாதியில் பஞ்சாப் முதல்வர் வழிபாடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்தார்பூர் குருநானக் சமாதியில் பஞ்சாப் முதல்வர் வழிபாடு

Added : நவ 18, 2021
Share
லாகூர்:பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் நினைவிடத்தில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தன் அமைச்சரவை சகாக்களுடன் நேற்று வழிபாடு செய்தார்.இந்திய - பாக்., எல்லையில் அமைந்துள்ள பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் தேரா பாபா நானக் கோவில் உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ., தொலைவில், பாக்.,கின்

லாகூர்:பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் நினைவிடத்தில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தன் அமைச்சரவை சகாக்களுடன் நேற்று வழிபாடு செய்தார்.
இந்திய - பாக்., எல்லையில் அமைந்துள்ள பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் தேரா பாபா நானக் கோவில் உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ., தொலைவில், பாக்.,கின் கர்தார்பூர் என்ற இடத்தில் குருநானக் சமாதியான குருத்வாரா தர்பார் சாஹிப் உள்ளது. சீக்கியர்கள் இந்த சமாதிக்கு சென்று வழிபட கர்தார்பூர் பெருவழிச் சாலை அமைக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்தார்பூர் பெருவழிச் சாலை கடந்த ஆண்டு மூடப் பட்டது. குருநானக் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, கர்தார்பூர் பெருவழிச் சாலையை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த சாலை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில், பஞ்சாப் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட 30 பேர் கர்தார்பூர் பெருவழி சாலை மார்க்கமாக பயணித்து, குருத்வாரா தர்பார் சாஹிப்பில் நேற்று வழிபாடு செய்தனர்.பஞ்சாப் பா.ஜ., தலைவர் அஷ்வனி சர்மா தலைமையிலான 21 பேர் அடங்கிய குழுவினர், குருத்வாரா தர்பார் சாஹிபில் நேற்று காலை வழிபாடு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X