ரூ.5 லட்சம் கோடி! வாராக்கடன் மீட்பு : பிரதமர் மோடி பெருமிதம்

Updated : நவ 20, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (13+ 81)
Share
Advertisement
புதுடில்லி ;மத்தியில் பா.ஜ., அரசு அமைந்த பின், வங்கிகளின் 5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வங்கியில் கடன் வாங்கி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை அழைத்து வந்து நீதிமன்றத்தில் நிறுத்த, அனைத்து வழிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். டில்லியில் மத்திய நிதியமைச்சகம் சார்பில், 'தாராள கடன்
வாராக்கடன் ,மீட்பு,மோடி பெருமிதம், ரூ.5 லட்சம் கோடி

புதுடில்லி ;மத்தியில் பா.ஜ., அரசு அமைந்த பின், வங்கிகளின் 5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வங்கியில் கடன் வாங்கி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை அழைத்து வந்து நீதிமன்றத்தில் நிறுத்த, அனைத்து வழிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

டில்லியில் மத்திய நிதியமைச்சகம் சார்பில், 'தாராள கடன் வசதியும், பொருளாதார வளர்ச்சியும்' என்ற மாநாடு நடந்தது. வங்கித் துறையினர் பங்கேற்ற இம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:வங்கிகள் கூட்டுறவு பாணியை பின்பற்றி வர்த்தகம் செழிக்க உதவ வேண்டும். வாடிக்கையாளர்களின் கடன் விண்ணப்பத்தை வங்கிகள்
அங்கீகரிக்கின்றன. இனி, வர்த்தக கடன்களை அதிக அளவில் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நிலைக்கு வங்கிகள் மாற வேண்டும். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோரையும் வங்கிகள் ஆதரிக்க வேண்டும்.


தரக் குறியீடுவங்கிகள் அவற்றின் நிதிநிலையை நன்கு கவனிப்பதுடன், நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தவும் துணைபுரிய வேண்டும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவற்றின் பலதரப்பட்ட வர்த்தகத்திற்கு ஏற்றபடி பலவகை கடன் திட்டங்களை வங்கிகள் அறிமுகப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் வரும் வரை காத்திருக்காமல், அவர்களை தேடி வங்கிகள் செல்ல வேண்டும்.
வங்கிகளிடம் போதுமான அளவிற்கு மூலதன ஆதாய இருப்பு உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வாராக் கடனும் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா தாக்கத்திலும் நடப்பு 2021 - 22ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் வங்கித் துறை வலுவான நிலையில் இருந்தது. இதன் காரணமாக சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், இந்திய வங்கித் துறையின் தரக் குறியீட்டை உயர்த்தியுள்ளன.வங்கியில் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச் சென்றவர்கள் கண்டிப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவர். அதற்கான அனைத்து வழிகளையும் அரசு கையாண்டு வருகிறது. இது போன்ற பொருளாதார குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம்.கடந்த 6 - 7 ஆண்டுகளில் திவால் சட்டம் உட்பட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் வாயிலாக வங்கித் துறையை வலுவான நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.


பங்கு மூலதனம்வங்கித் துறையின் வாராக் கடனுக்கு தீர்வு காண முயற்சி எடுத்துள்ளோம். வங்கிகளில் பங்கு மூலதனம் மேற்கொண்டு உள்ளோம். கடன் மீட்பு தீர்ப்பாயத்தை வலிமையாக்கிஉள்ளோம். இது போன்ற நடவடிக்கைகளால் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் இருந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து, 5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் மீட்கப்பட்டுள்ளது. புதிதாக துவக்கப்பட்டுள்ள வாராக் கடன் வங்கி வாயிலாக, 2 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் மீட்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


'கிரிப்டோகரன்சி' செயல் திட்டம்ஆஸ்திரேலியாவின் 'சிட்னி டயலாக்' மாநாட்டில், பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:ஒரு ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய வலிமை, வெளிப்படை தன்மை தான். அதை தவறான நோக்கம் உள்ளோர் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்திலும் 'டிஜிட்டல்' யுகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் நாட்டின் இறையாண்மை, அரசு நிர்வாகம், நன்னடத்தை, உரிமை, பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக புதிய கேள்விகளையும் டிஜிட்டல் தொழில்நுட்பம் எழுப்பியுள்ளது.ஒரே கருத்துடைய நாடுகள், அவற்றின் ஜனநாயக மதிப்பின் வாயிலாக தரவுகளை நிர்வகிப்பதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை உருவாக்க வேண்டும். அது, மக்களின் உரிமையை அங்கீகரிப்பதுடன், வர்த்தகம், முதலீடு போன்றவற்றை மேம்படுத்தவும் பயன்பட வேண்டும். இதற்கு உதாரணமாக, 'பிட்காய்ன்' போன்ற கிரிப்டோகரன்சிகளின் பயன்பாட்டை கூறலாம்.
அதேசமயம் இத்தகைய கிரிப்டோகரன்சி தொழில்நுட்பம், தவறான நபர்களின் கைகளுக்கு செல்வதை தடுக்க வேண்டும். இதற்கு, அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒருங்கிணைந்து செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (13+ 81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
19-நவ-202110:13:40 IST Report Abuse
Priyan Vadanad நமது பிரதமர் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரிசர்வ் பேங்க்கும் இதனை attest செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். எதிர்ப்பாளர்கள் வாயை அடைத்த மாதிரியும் இருக்கும். இது ரொம்ப நல்ல செய்திதான்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
19-நவ-202119:50:57 IST Report Abuse
sankar"ரூ.5 லட்சம் கோடி வாராக்கடன் மீட்பு"- உறுதி செய்யப்படும் - சிதம்பரம் மறுக்கட்டுமே பாப்போம்...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-நவ-202109:16:57 IST Report Abuse
Lion Drsekar இவரைத்தவிர இவர்கள் சார்ந்தவர்கள் கூட இதுபோன்ற செயல்பாடுகளை கூற வாயே திறக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது, ஜனநாயகத்துக்கு வாய்மட்டுமே மூலதனம், வந்தே மாதரம்
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-நவ-202114:24:32 IST Report Abuse
Dhurveshஏம்பா மேதாவி இவர் மீட்டது 5 லட்சம் கோடி , சரி அப்போ YES BANK இந் கடன் மட்டும் 9 லட்சம் கோடி , அதை மறைக்க அதை SBI யில் சேர்த்து விட்டார் , மீட்டது 5 லட்சம் கோடி , ஓட விட்டது 9 லட்சம் கோடி ஒரு வங்கி , இதில் உனக்கு பெருமை வேறு , போ அவருக்கு award கொடு , எங்களை எல்லாம் ஏமாற்ற முடியாது...
Rate this:
19-நவ-202114:26:33 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்INDIA "S debt to GDP ratio is now at a 15 years HIGH / மேலும் 2014 இல் உங்கள் மோடிஜி ஆட்சிக்கு வரும் முன்னர் TOTAL DEBT ON INDIA 55 laks CRORES அனால் உங்கள் மோடிஜி வந்த 7 வருடத்தில் அது NOW TOTAL DEBT ON INDIA 116 laks CRORES அப்படியே இரண்டு மடங்கு ஆகி உள்ளது இது RBI வெளி இட்டு உள்ளது BUSINESS TIMES படி , அப்போ desel PETROL என்று பகல் கொள்ளை அடிசி 40 லட்சம் கோடி வசூல் எங்கே / GST என்று மாதா மாதம் மக்களிடம் கறக்கும் 1.5 கோடி எல்லாம் எங்கே போனது அவன் 70 வருட வாங்கிய கடனை நீ 7 வருடத்தில் வாங்கி உள்ள, இதற்க்கு ஒரு வெள்ளை அறிக்கை கொடேன் அப்போ தான் உங்கள் இந்தியர்கள் தலையில் எவ்வளவு கடன் என்று தெரியும் , செய்வீர்...
Rate this:
sankar - Nellai,இந்தியா
19-நவ-202119:52:42 IST Report Abuse
sankarபொய் சொல்லாதே - வழக்கு வரும் - எச்சரிக்கிறேன் மிஸ்டர் தங்கம்...
Rate this:
Cancel
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
19-நவ-202107:40:37 IST Report Abuse
Ramanujam Veraswamy Let RBI announce 1.NPA as ondate 2.Out of 1, how much is the loan sanctioned during NDA regime.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X