அருணாச்சல் எல்லையில் சீனா அத்துமீறல் : 2வது கிராமத்தை கட்டமைத்தது

Updated : நவ 20, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி அருணாச்சல பிரதேச மாநில எல்லை அருகே, மேலும் ஒரு கிராமத்தை சீனா கட்டமைத்துள்ளது, செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறுவதும், அதற்கு நம் ராணுவம் பதிலடி கொடுப்பதும் அடிக்கடி நடக்கும் சம்பவமாக உள்ளது. அதேபோல் நம் நாட்டின் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, சீனா தங்களுக்கு சொந்தம் என கூறி வருகிறது. அருணாச்சல்
அருணாச்சல் எல்லை, அத்துமீறல்2வது கிராமம்,

புதுடில்லி அருணாச்சல பிரதேச மாநில எல்லை அருகே, மேலும் ஒரு கிராமத்தை சீனா கட்டமைத்துள்ளது, செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறுவதும், அதற்கு நம் ராணுவம் பதிலடி கொடுப்பதும் அடிக்கடி நடக்கும் சம்பவமாக உள்ளது. அதேபோல் நம் நாட்டின் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, சீனா தங்களுக்கு சொந்தம் என கூறி வருகிறது. அருணாச்சல் எல்லையில் அதி நவீன கிராமத்தை சீனா கட்டமைத்துள்ளதை, அமெரிக்க ராணுவ தலைமையகமான 'பென்டகன்' சமீபத்தில் உறுதி செய்தது.சுபன் மாவட்டம், சாரி சூ நதிக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த கிராமத்தில், 101 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் அருணாச் சல் எல்லையில் மேலும் ஒரு கிராமத்தை சீனா கட்டமைத்துள்ளது, செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அருணாச்சலில் யோமி மாவட்டத்தின் எல்லையில், ௨௦௧௯ - ௨௧ம் ஆண்டுக்குள் இந்த கிராமத்தை சீனா கட்டியுள்ளது. எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லைக்கு நடுவில் உள்ள பகுதியில் இந்த கிராமத்தை சீனா கட்டி உள்ளது.இது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:அருணாச்சல் எல்லையில் ௧௯௫௯ல் அத்துமீறி ஆக்கிரமித்த பகுதிகளில், சீனா தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் எல்லையில் உள்கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் மேம்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


ராஜ்நாத் சிங் எச்சரிக்கைகடந்த 1962ம் ஆண்டு லடாக்கின் ரேசாங் லா பகுதியில், இந்தியா - சீனா இடையே போர் நடந்தது. அதில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக, ரேசாங் லா பகுதியில் போர் நினைவிடம் கட்டமைக்கப்பட்டது. அந்த நினைவிடம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.டாக் வந்துள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அதை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ரேசாங் லா பகுதிக்கு வந்ததும், 1962ம் ஆண்டு நடந்த போரில், உயிர் தியாகம் செய்த 144 இந்திய வீரர்களுக்கும் மரியாதை செலுத்தினேன்.பிற நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது இந்தியாவின் குணம் கிடையாது.
எனினும், வேறு எந்த நாடாவது இந்தியாவுக்கு தீங்கிழைக்க நினைத்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா ஒருபோதும் தயங்காது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rengha - Rajapalayam,இந்தியா
19-நவ-202109:15:56 IST Report Abuse
rengha சீனா கட்டுமானம் தரமானதாக இருக்கட்டும் எப்படி இருந்தாலும் அது திபெத்துக்கு சொந்தமாக போகிறது. சீனாவில் ஆளில்லா நகரம் நிறைய இருக்கிறது அதுபோல் இதுவும் இருக்கட்டும்,திபெத் எல்லையில் புதிய கட்டுமானம் திபெத் அரசு செய்கிறது .....
Rate this:
Cancel
appan -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-202107:23:23 IST Report Abuse
appan we come to the know of things only through Pentagon? I am unable to believe.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-நவ-202106:38:45 IST Report Abuse
Kasimani Baskaran எல் ஏ சி Line of Acutal Control என்பதுதான் சீனாவுடனான எல்லைகளை வகுப்பது. அதாவது பாக்கிஸ்தான் எல்லை போல அல்லாமல் ஒருவரும் இதுவரை எந்த இடத்திலும் வேலி போடவில்லை - போட விடவும் மாட்டார்கள். போட ஆரம்பித்தால் வம்பு செய்வார்கள். கூட்டாக ரோந்து செல்ல வசதியிருக்கும் இடங்களில் பிரச்சினை வராது. சீனா எல்லைகளிலும் கூட சாலை வசதிகளை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. முன்னர் காஷ்மீர் தனி அந்தஸ்துப்பகுதி என்பதால் எந்த வித வளர்ச்சியையும் இந்திய அரசு செய்ய முடியாது. இப்பொழுது நிலைமை வேறு. எல்லை வரை எல்லாவித ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும். இராணுவத்தை விரைவாக அனுப்பி வைக்க முடியும். ஆகவே உரசல் வரத்தான் செய்யும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X