சி.பி.எஸ்.இ., முதல் பருவத்தேர்வு மாணவர்கள் கோரிக்கை நிராகரிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுடில்லி:சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., ௧௦ மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான முதல் பருவத்தேர்வை, 'ஆன்லைனில்' எழுத அனுமதிக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.'ஆன்லைன்'உச்ச நீதிமன்றத்தில் ஆறு மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. பள்ளிக்கு நேரடியாக செல்வதை

புதுடில்லி:சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., ௧௦ மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான முதல் பருவத்தேர்வை, 'ஆன்லைனில்' எழுத அனுமதிக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.


'ஆன்லைன்'

உச்ச நீதிமன்றத்தில் ஆறு மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. பள்ளிக்கு நேரடியாக செல்வதை தவிர்த்து, பல மாணவர்கள் ஆன்லைன் வாயிலாகவே பாடங்களை படித்து வருகின்றனர்.ஆனால், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான முதல் பருவத்தேர்வுகளை மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து நேரடியாக எழுத வேண்டும் என, சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., அறிவித்து உள்ளன.
தொற்று பரவலை மனதில் வைத்து நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ தேர்வு எழுத, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

சி.பி.எஸ்.இ., சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ''கொரோனா பரவல் கட்டுப்பாட்டுடன் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தடுப்பு நடவடிக்கை

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: சி.பி.எஸ்.இ., தேர்வு கள் துவங்கிவிட்டன. சி.ஐ.எஸ்.சி.இ., தேர்வுகள் துவங்க உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆன்லைனில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்கும்படி சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ.,க்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X