புதிய அவசர சட்டத்தை எதிர்த்து காங்., வழக்கு

Updated : நவ 19, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:சி.பி.ஐ., அமலாக்கத் துறையின் தலைவர்கள் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கும் புதிய அவசர சட்டத்தை எதிர்த்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தலைவர்களின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில், புதிய அவசர
புதிய அவசர சட்டதம்,  காங்., வழக்கு

புதுடில்லி:சி.பி.ஐ., அமலாக்கத் துறையின் தலைவர்கள் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கும் புதிய அவசர சட்டத்தை எதிர்த்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தலைவர்களின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில், புதிய அவசர சட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது:

சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் அரசு நிர்வாகத்துக்கு அப்பாற் பட்டு சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என, பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அவசர சட்டங்கள், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக அமைந்து உள்ளன. வழக்கமான இரண்டாண்டு பதவிக்காலம் முடிந்த பின், ஆண்டுக்கு ஒரு முறை என மூன்று முறை பதவிக் காலம் நீடிக்கும் வகையில் அவசர சட்டம் உள்ளது.

பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு எந்த வரையறையும் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் நலன் கருதி, இந்த நீட்டிப்பை வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக இந்த அமைப்புகள் அரசின் கருணையில் இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், இந்த அவசர சட்டங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-நவ-202109:23:15 IST Report Abuse
Lion Drsekar அடுத்த நிலையில் இவர்களால் வேலைக்கு வைக்கப்பட்டவர்கள் இருப்பார்களோ என்ற அச்சம் ஊடகங்கள் மொழியில் கூறவேண்டுமானால் சமூக ஆர்வலர்களின் கேள்வி , > வந்தே மாதரம்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-நவ-202107:53:44 IST Report Abuse
Kasimani Baskaran சிபிஐயோ அல்லது நீதித்துறையோ எந்த ஆட்சியில் சுயமாக இயங்கின? மேலே சொன்ன இரண்டு அமைப்புக்களிலும் இன்னும் ஏறாளமான அளவில் காங்கிரஸ் காளான்கள் இருக்கிறார்கள். கொலீஜியமே தங்களுக்கு தேவையானவர்களை உச்சநீதி மன்றங்களில் பதவியில் அமர்த்த ஏற்ப்படுத்தப்பட்ட அமைப்புத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X