பொது செய்தி

தமிழ்நாடு

5 சவரன் கடன் தள்ளுபடி நகை எப்போது கிடைக்கும்?

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட 5 சவரன் கடனுக்கான நகைகள், எந்த தேதியில் இருந்து திரும்ப வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்துமாறு, தமிழக அரசுக்கு வாடிக்கையாளர்களும், வங்கி அதிகாரிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை, தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதனால் 16 லட்சம் பேர்

சென்னை:கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட 5 சவரன் கடனுக்கான நகைகள், எந்த தேதியில் இருந்து திரும்ப வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்துமாறு, தமிழக அரசுக்கு வாடிக்கையாளர்களும், வங்கி அதிகாரிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை, தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதனால் 16 லட்சம் பேர் பயன் பெறுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கடன்தாரர்கள், தங்களின் நகைகளை திரும்ப வழங்க கோரி, வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

ஆனால், நகைகள் திரும்ப வழங்கப்படவில்லை.இதே கோரிக்கைக்காக, தொடர்ந்து வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் செல்வதால், வங்கி பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், எப்போது நகைகள் திரும்ப வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்துமாறு, அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நகைகளை வழங்க உத்தரவு வராதபட்சத்தில் எப்படி வழங்க முடியும். எப்போது நகை வழங்கப்படும் என்பதை, அரசு தான் தெரிவிக்க வேண்டும்' என்றார்.

கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நகை கடன் முறைகேடு தொடர்பாக, ஒரு மாவட்ட அதிகாரிகள், வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். 'அரசு விதித்துள்ள நிபந்தனையின் கீழ் பயானளிகள் தேர்வு நடக்கிறது. இந்த பணிகள் முடிந்ததும் நகைகள் வழங்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X