பொது செய்தி

தமிழ்நாடு

சார் -- பதிவாளர்களுக்கு பதிவுத்துறை 'குட்டு'

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:பவர் பத்திரம் எனப்படும், பொது அதிகார ஆவணங்களை ரத்து செய்ய வருவோரை அலைக்கழிக்கும் சார் - பதிவாளர்களுக்கு 'குட்டு' வைக்கும் வகையில், பதிவுத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.வீடு, மனை விற்பனையில் நேரடியாக பங்கேற்க முடியாத உரிமையாளர்கள், தங்கள் சார்பாக செயல்பட, பவர் பத்திரம் என்ற பொது அதிகார பத்திரங்கள் வாயிலாக முகவர்களை நியமிக்கலாம். இவ்வாறு அதிகாரம்

சென்னை:பவர் பத்திரம் எனப்படும், பொது அதிகார ஆவணங்களை ரத்து செய்ய வருவோரை அலைக்கழிக்கும் சார் - பதிவாளர்களுக்கு 'குட்டு' வைக்கும் வகையில், பதிவுத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

வீடு, மனை விற்பனையில் நேரடியாக பங்கேற்க முடியாத உரிமையாளர்கள், தங்கள் சார்பாக செயல்பட, பவர் பத்திரம் என்ற பொது அதிகார பத்திரங்கள் வாயிலாக முகவர்களை நியமிக்கலாம். இவ்வாறு அதிகாரம் பெறும் முகவர், தவறாக செயல்பட்டால், அவரின் அதிகாரத்தை ரத்து செய்ய உரிமையாளர் முடிவு செய்வார்.

இதற்காக வரும் உரிமையாளர்களை சார் -பதிவாளர்கள் அலைக்கழிப்பதாக புகார்கள் எழுகின்றன.இது தொடர்பாக, சார் - பதிவாளர்களுக்கு 'குட்டு' வைக்கும் வகையில், பதிவுத் துறை சில உத்தரவுகளை, சுற்றறிக்கை வாயிலாக பிறப்பித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:

பொது அதிகார ஆவணத்தை ரத்து செய்ய, முகவரின் ஒப்புதல் தேவையில்லை. உரிய ரத்து ஆவணத்தை பதிவு செய்ய, உரிமையாளர்களை சார் - பதிவாளர்கள் அறிவுறுத்தலாம்.பொது அதிகார ஆவணத்தை ரத்து செய்வது குறித்து, முகவருக்கு உரிமையாளர் தகவல் அனுப்ப வேண்டும் என, சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த விபரத்தை ரத்து ஆவணத்தில் சேர்க்க வேண்டும் என, சட்ட விதியில் குறிப்பிடப்படவில்லை.

எனவே, பொது அதிகாரத்தை ரத்து செய்யும் ஆவணங்களை, எவ்வித ஆட்சேபமும் இன்றி சார் -பதிவாளர்கள் பதிவுக்கு ஏற்க வேண்டும். இந்த விஷயத்தில் புகார்களுக்கு இடமின்றி, சார் - பதிவாளர்கள் செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X