சட்ட கல்லுாரி மாணவர்களுக்கும் நேரடி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட கல்லுாரி மாணவர்களுக்கும் நேரடி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு

Added : நவ 18, 2021
Share
சென்னை:'சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு, டிச., 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்' என, தமிழக சட்ட பல்கலை அறிவித்துள்ளது. சட்ட கல்லுாரிகளில் நேரடியாக நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2019 முதல் 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டது. இதுவரை தொடர்ச்சியாக, மூன்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த

சென்னை:'சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு, டிச., 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்' என, தமிழக சட்ட பல்கலை அறிவித்துள்ளது.
சட்ட கல்லுாரிகளில் நேரடியாக நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2019 முதல் 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டது. இதுவரை தொடர்ச்சியாக, மூன்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த கல்வியாண்டின் முதல் செமஸ்டர் தேர்வும், ஆன்லைன் வழியில் நடக்குமா என, மாணவர்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பல்கலையின் பதிவாளர் ரஞ்சித் உம்மன் ஆபிரகாம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப, அனைத்து பிரிவு மாணவர்களுக்கும், நேரடியாக பாட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே, சட்டக் கல்வியின் தரத்தை பேணும் வகையில், பல்கலையின் பருவ தேர்வுகள் இனி நேரடி தேர்வாக மட்டுமே நடத்தப்படும்.
அந்த தேர்வுகள் டிச., 20ல் துவங்கி, சீர்மிகு சட்ட பள்ளி உட்பட பல்கலையின் இணைப்பு பெற்ற அனைத்து சட்டக் கல்லுாரிகளிலும் நேரடி தேர்வாக நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகள் கலை, அறிவியல் கல்லுாரிகளில், ஆன்லைன் வழி தேர்வு ரத்து செய்யப்பட்டு, நேரடி தேர்வே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கும், ஆன்லைன் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நேரடி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X