அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சரவை கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:இன்று நடக்கவிருந்த தமிழக அமைச்சரவை கூட்டம், மழை காரணமாக நாளை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று மாலை 5:00 மணிக்கு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் முழுதும் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம், மிக கன மழை எச்சரிக்கை

சென்னை:இன்று நடக்கவிருந்த தமிழக அமைச்சரவை கூட்டம், மழை காரணமாக நாளை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று மாலை 5:00 மணிக்கு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் முழுதும் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம், மிக கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, கன மழை பெய்யும் மாவட்டங்களில், நிவாரண பணிகளில் ஈடுபடும்படி, அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதன் காரணமாக, இன்று நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம், நாளை மாலை 6:00 மணிக்கு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X